போட்டி மதிமுக நாளை முக்கிய முடிவு
சென்னை:திமுக கூட்டணியில் இணையலாம் என அக்கட்சியின் உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் அழைப்புவிடுக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் தலைமையிலான போட்டி மதிமுக நாளைதஞ்சையில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது.
வைகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் சமீபத்தில் சேலத்தில்போட்டி பொதுக்குழுவைக் கூட்டினர். அதில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வைகோ நீக்கப்படுவதாகதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக இருவரும்தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னையில் நேற்று கூடிய திமுக உயர் மட்ட செயல்திட்டக் குழுக் கூட்டத்தில்போட்டி மதிமுக விரும்பினால் திமுக கூட்டணியில் ஒரு கட்சியாக இணையலாம் என பகிரங்கமாக அழைப்புவிடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து திமுக கூட்டணியில் இணைவது குறித்து விவாதிக்க நாளை தஞ்சையில் முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக எல்.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட மதிமுகநிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை கந்தசரசு திருமணமண்டபத்தில் நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டச் செயலாளர் தியாகபாரி தலைமையில் கூட்டம் நடைபெறும். இதில் இன்றைய அரசியல்சூழ்நிலை, அது உருவான காரணங்கள், எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து ஆலோசித்துதீர்மானிக்கப்படவுள்ளது.
அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தவுள்ள இக்கூட்டத்தில் மதிமுக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல்கலந்து கொண்டு ஆக்கப்பூர்வமான, அரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாளைய கூட்டத்தில் திமுக கூட்டணியில் இணைவது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications