பெரியார் சிலைக்குத் தூக்கு: இ.ம.க பிரமுகர் கைது
கோவை:கோவை அருகே பெரியார் சிலையின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தூக்குப் போடுவது போல செய்துஅவமரியாதை செய்ததாக இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் திருமுருகன் என்பவரைபோலீஸார் கைது செய்தனர்.
சமீபத்தில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்தசர்ச்சை சமீபத்தில்தான் ஓய்ந்தது. இந்த நிலையில் கோவையில் மறுபடியும் பெரியார் சிலைக்கு அவமதிப்புநடந்துள்ளது.
கோவை புளியகுளம் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அருகே பெரியாரின் சிலை உள்ளது. இந்த சிலைக்குஅருகே திமுக கொடிக்கம்பம் உள்ள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் சிலர் திமுக கொடியை தீவைத்துஎரித்துள்ளனர்.
பின்னர் சிலையின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தூக்கில் போடுவது போல கயிற்றைக் கட்டியிருந்தனர். இதனால்அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.
இதுகுறித்துத் தகவல் அறிந்தவுடன் புளியகுளம் போலீஸார் விரைந்து வந்தனர். பெரியார் சிலையின் கழுத்தில்கட்டப்பட்டிருந்த கயிற்றை அகற்றினர். அங்கு பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பெரியார் சிலையை இப்படி விஷமத்தனமாக அவமரியாதை செய்த நபர்களை தேடி வந்தனர். இதில், இந்துமக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் திருமுருகன் என்பவர் சிக்கினார். இவரது வீடு சிலைக்கு வெகுஅருகில்தான் உள்ளது.
அவரைப் போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டப்படிநடவடிக்கை எடுக்க போலீஸார் திட்டமிட்டள்ளனர்.
பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்க போலீஸார்உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications