உறைகிறது தால் - பனியில் நடுங்கும் வட இந்தியா
ஸ்ரீநகர்:உலகப் புகழ் பெற்ற தால் ஏரி கடும் பனிப் பொழிவு காரணமாக உறையத் தொடங்கியுள்ளது. பனிப்பொழிவுநாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வட இந்தியா முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் டெல்லி உள்படவட இந்தியா முழுமையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கடும் பனியிலும், குளிரிலும் நடுங்கிக் கொண்டுள்ளனர். டெல்லியில் விமானப் போக்குவரத்து கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. எந்த விமானமும் சரியான நேரத்திற்குப் புறப்படுவதும் இல்லை, வந்து சேருவதும் இல்லை.
தொடர்ந்து நிலவி வரும் கடும் பனி மற்றும் குளிருக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற தால் ஏரியின் பல பகுதிகளில் பனிகாரணமாக உறையத் தொடங்கியுள்ளது.
காஷ்மீரில் இரவு நேர வெப்பநிலை தற்போது -5.9 டிகிரியாக உள்ளது. பகல் நேரங்களில் இதமான தட்பவெப்பம்நிலவினாலும், இரவில் கடும் பனி இருக்கிறது.
கடும் பனிப்பொழிவு காரணமாக தால் ஏரியின் பல பகுதிகள் உறையத் தொடங்கி விட்டன. தால் ஏரி கடந்த1960களில் முழுமையாக உறைந்து பனிக்கட்டி ஏரியாக மாறியது. அப்போது -12 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை இருந்தது.
அந்த சமயத்தில் உறைந்த தால் ஏரியின் வழியாக வாகனங்கள் கூட சென்றதாம். அதன் பின்னர் 1986ம் ஆண்டுதால் ஏரி முழுமையாக உறைந்து போனது. உறைந்த ஏரியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.
அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் கடும் பனி நிலவினாலும் ஏரி உறைந்து போகவில்லை. இந்த நிலையில்இந்த ஆண்டு கடும் பனி நிலவுவதால் ஏரியின் பல பகுதிகள் உறை நிலைக்குப் போக ஆரம்பித்துள்ளன. ஏரிமுழுமையாக உறையுமா என்ற எதிர்பார்ப்பு காஷ்மீர் வாசிகளிடம் மட்டுமல்லாது சுற்றுலாப் பயணிகளிடமும்ஆவலை தூண்டியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications