அறிவியல் மாநாட்டில் அணையை இழுத்த ஜோசப்
சிதம்பரம்:சிதம்பரத்தில் நடந்து வரும் இந்திய அறிவியல் மாநாட்டில் முல்லைப் பெரியாறுபிரச்சினை தொடர்பாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார், டிவி நடிகையிடம் ஓடும்விமானத்தில் கை வைத்து சர்ச்சையில் சிக்கிப் பதவி இழந்த முன்னாள் கேரளஅமைச்சர் பி.ஜே.ஜோசப்.
சிதம்பரத்தில் நடந்து வரும் 94வது இந்திய அறிவியல் மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமைஇயற்கை மூலாதாரங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது. அப்போது முன்னாள்அமைச்சர் பி.ஜே. ஜோசப் அங்கு வந்தார்.
பார்வையாளர்கள் பகுதியில் பார்வையாளராக அமர்ந்து கருத்தரங்கை கவனித்தார்.அப்போது கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள பார்வையாளர்கள் சந்தேகம் இருந்தால்கேட்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அப்போது ஜோசப் தடாலென எழுந்து மைக்கைப் பிடித்து பேச ஆரம்பித்தார். அவர்பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை கட்டி 110 ஆண்டுகள் ஆகின்றன. 1979ம்ஆண்டு முல்லைப் பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை கட்ட வேண்டும் எனமத்திய நீர் ஆணையம் பரிந்துரைத்தது.
தற்போது உள்ள பெரியாறு அணையை விஞ்ஞானிகள் ஆராய வேண்டும். அதன்பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும். எந்த அரசுக்கும் ஆதரவாகஇல்லாமல் விஞ்ஞானிகள் சுயமாக இந்த ஆய்வை மேற்கொண்டு அணையின்பாதுகாப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
இந்தப் பிரச்சினையில் விஞ்ஞானிகள் தலையிட வேண்டிய நேரம் வந்து விட்டது.உண்மை என்ன என்பதை சொல்ல அவர்கள் தயங்கக் கூடாது. இந்தப் பிரச்சினைக்குமுடிவு கட்ட விஞ்ஞானிகளால்தான் முடியும்.
அணை பலமானதாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தால் அணை அப்படியேஇருக்கட்டும். இல்லை என்று கூறினால், புதிய அணை கட்டப்பட வேண்டும் என்றார்.அவர் பேசியது பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
வந்ததும் தெரியாமல் பேசியதும் தெரியாமல், தான் பேச வந்ததைப் பேசி விட்டுஜோசப் வேகமாக கிளம்பி விட்டார். டிவி நடிகையுடம் விமானத்தில் கை விட்டுசில்மிஷம் செய்து பதவி இழந்தபோது கேரள பொதுப்பணித்துறை அமைச்சராகஜோசப் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications