புஷ்ஷை தூக்கிலிட வேண்டும்-மகாதிர் ஆவேசம்
புத்ரஜயா (மலேசியா):சதாம் உசேனுக்குக் கொடுக்கப்பட்ட அதே தண்டனையை ஜார்ஜ் புஷ்ஷுக்கும் கொடுக்க வேண்டும் என மலேசியமுன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது கூறியுள்ளார்.
அமெ>க்காவின் தீவிர எதிர்ப்பாளர்களில் முக்கியமானவர் மகாதிர். 2003ம் ஆண்டு இவர் யூதர்கள் உலகைஆக்கிரமிக்க நினைக்கிறார்கள் என்று தெரிவித்த கருத்துக்கு அமெரிக்க அதிபர் புஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
![]() |
இந்த நிலையில் சதாம் தண்டனை குறித்து மகாதிர் காட்டமான கருத்தை வெளியிட்டுள்ளார். மகாதிர்முகம்மதுவுக்குச் சொந்தமான அமைதிக் கழகம் சார்பில் போர்க் குற்றவாளிகளை அம்பலப்படுத்துதல் என்றபெயரில் ஒரு கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்தக் கண்காட்சியில் மேற்கத்திய நாடுகள் செய்து வரும் போர்க் குற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள்காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. ஆப்கன், ஈராக், பாலஸ்தீனம், வியட்நாம் போர், ஹீரோஷிமா மீதானஅணுகுண்டு தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
![]() |
இதுதொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மகாதிர் பேசுகையில், அமெரிக்க அதிபர் புஷ்ஷும்,இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரும்தான் உண்மையில் மிகப் பெரிய போர் குற்றவாளிகள். சதாம் உசேனின்கரங்களில் இருந்ததை விட இவர்களின் கையில்தான் அதிக ரத்தக்கறை உள்ளது.
புஷ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சதாம் உசேன் சந்தித்த அதே கட்டப்பஞ்சாயத்து முன்பு அவரையும் நிறுத்தி, சதாமுக்கு கொடுக்கப்பட்ட அதே தண்டனையை புஷ்ஷுக்கும் தரவேண்டும்.
பிளேர் ஒரு குற்றவாளி. சதாம் செய்ததை விட அதிக அளவிலான தவறுகளை பிளேர் செய்துள்ளார். அமைதியைஏற்படுத்துவதாக கூறிக் கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க, இங்கிலாந்து படைகள் கொன்றுகுவித்ததை விட சதாம் உசேனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பமானது தான் என்றுகாட்டமாக கூறினார் மகாதிர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்














Click it and Unblock the Notifications