வெளிநாட்டு தமிழர் பிரச்சனைகள் களைய மாநாடு
டெல்லி:மலேசியாவில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வகை செய்யும் ஒப்பந்தம்விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு கூறியுள்ளார்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 135 பேர் கொண்ட குழுவினருடன் டெல்லிவந்துள்ள டத்தோ சாமிவேலு நிருபர்களிடம் கூறியதாவது,
மலேசியாவில் 18 லட்சம் தமிழர்கள் உள்ளிட்ட 20 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு வேலைதேடி வருபவர்களில் ஒரு பிரிவினர் முறைப்படியான பணி நியமன ஆணை, தொழிலாளர் விசா பெற்றுவருகிறார்கள்.
மற்றொரு பிரிவினர் சுற்றுலா விசா பெற்று தரகர்கள் மூலம் மலேசியா வந்து விமான நிலையத்தில்பாஸ்போர்ட்டுகளை இழந்து பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதனால் மலேசியாவில் பணிபுரியும்இந்தியர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில் மலேசிய அரசு ஒரு திட்டத்தை வகுத்தது. ஆனால்இந்திய அரசின் சில விதிமுறைகள் மலேசியாவுக்கு ஒத்து வராததால் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தமுடியவில்லை.
சமீப காலமாக இந்த பிரச்சனை தொடர்பாக இந்திய அரசுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வுகாணப்பட்டுள்ளது. எனவே இந்திய தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு தொடர்பாக இந்திய அரசுக்கும்,மலேசிய அரசுக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களை ஒருங்கிணைத்து விரைவில் மாநாடு ஒன்றை நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களுடையகுழந்தைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications