சதாம் இல்லாமல் வாழ்க்கையா?-கண்ணீரில் தம்பி

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:சதாம் உசேனுடன் சேர்த்து எங்களையும் தூக்கில் போடாமல் இன்னும் ஏன் உயிருடன் விட்டு வைத்திருக்கிறார்கள்என்று அவரது ஒன்று விட்ட தம்பி பர்ஸான் அல் திக்ரிதியும், முன்னாள் நீதிபதி அவாத் அல் பாந்தரும் கண்ணீர்மல்க தன்னிடம் கூறியதாக சதாமின் வழக்கறிஞர்கள் பஸ்ரா அல் கலீல் மற்றும் இஸ்ஸாம் அல் கஸ்ஸாவிஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Al Tikrit

சதாம் உசேன் தவிர அவரது ஒன்று விட்ட தம்பி திக்ரிதி, முன்னாள் நீதிபதி அவாத் அல் பாந்தர் ஆகியோருக்கும்தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சதாம் மட்டுமே தூக்கிலிடப்பட்டுள்ளார். மற்ற இருவரும் தொடர்ந்துஅமெரிக்க படையினரின் பாதுகாப்பில் உள்ளனர். அவர்களுக்கு எப்போது தூக்குத் தண்டனைநிறைவேற்றப்படும் என்பதை ஈராக் அரசு உறுதியாக தெரிவிக்காமல் உள்ளது.

இந்த நிலையில் இவர்களை சதாமின் லெபனான் வக்கீல் அல் கலீல் மற்றும் ஜோர்டான் வக்கீல் கஸ்ஸாவிஆகியோர் சிறைக்குச் சென்று பார்த்து பேசினர். அப்போது இருவரும் சதாமின் மரணம் தங்களை வெகுவாகபாதித்து விட்டதாகக் கூறி கதறி அழுதனராம்.

Al Bander

சதாம் உசேனுடன்தான் இவர்களும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். சதாம் தூக்கில் போடப்படுவதற்கு சிறிதுநேரத்திற்கு முன்பாக அவர்களை வேறு இடத்திற்கு அமெரிக்க படையினர் அழைத்துச் சென்று விட்டனர்.இவர்கள் இருவருடன் முன்னாள் துணைப் பிரதமர் தாரிக் அஜீஸ், முன்னாள் துணை அதிபர் தாஹா யாசின்ரமதான் ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இரு வக்கீல்களும் இந்த நான்கு பேரையும் பார்த்தபோது சதாமை இழந்து அவர்கள் நான்கு பேரும் கடும்சோகத்தில் இருப்பது தெரிய வந்தது.

பர்ஸானும், பாந்தரும் கூறுகையில், சதாம் தூக்கிலிடப்பட்ட காலையில் எங்களை எழுப்பி வேறு இடத்திற்குக்கூட்டிச் சென்றனர். எதற்காக என்று அப்போது தெரியவில்லை. அதிபரை தூக்கிலிடப் போகிறார்கள் என்றுஎங்களுக்குச் சொல்லப்படவில்லை.

தனி இடத்திற்குக் கூட்டிச் சென்று எங்களது கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள். அப்போது எங்களைத்தான்தூக்கில் போடப் போகிறார்கள் என்று நினைத்தோம். ஆனால் எங்களை தூக்கில் போடவில்லை. மாறாக அதிபரைதூக்கில் போட்டு விட்டதாக பின்னர் எங்களுக்குத் தெரிய வந்தபோது அதிர்ந்து நிலை குலைந்து போய்விட்டோம் என்று கூறியபடி கதறி அழுதனராம்.

அதிபருடன் சேர்ந்து எங்களது உயிரும் போயிருக்க வேண்டும். அந்த பாக்கியத்தை அமெரிக்கர்களும், ஈராக்பொம்மை அரசும் எங்களுக்கு வழங்காமல் போய் விட்டன.

அதிபரே போய் விட்டார். இனி நாங்கள் இருந்து என்ன பயன்? எங்களது உடலில் உயிர் இருப்பதில்தான் என்பயன் என்று கூறியபடி நான்கு பேரும் கண்ணீர் மல்க சதாமை நினைவு கூர்ந்துள்ளனர்.

நான்கு பேரிலும் தாரிக் அஜீஸ்தான் மிகவும் உடைந்து போய்க் காணப்படுகிறாராம். சதாமின் மிக நெருங்கியநண்பராக, நீண்ட காலமாக அவருடன் பணியாற்றியவர் அஜீஸ். ஈராக் தொடர்பான பிரச்சினைகளுக்குஅஜீஸைத்தான், வெளியுலகத்திற்கு அனுப்பி வைப்பார் சதாம். அந்த அளவுக்கு நம்பிக்கைக்குப்பாத்திரமானவராக விளங்கியவர் அஜீஸ்.

சதாம் மரணம் குறித்து அஜீஸ் கூறுகையில், சதாமைக் கொலை செய்து விட்டார்கள். அதன் மூலம் ஈராக்கையும்படுகொலை செய்து விட்டார்கள் என்று மட்டும் கூறினாராம் அஜீஸ்.

பாக்தாத் பேருந்தில் துப்பாக்கிசூடு: 15 பேர் பலி

இதற்கிடையே பாக்தாத் நகரில் சன்னி முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தொழிலாளர்கள் சென்றபேருந்தில் துப்பாக்கியால் சிலர் சரமாரியாக சுட்டதில் 15 பேர் உயி>ழந்தனர்.

மேற்கு பாக்தாத்தில் உள்ள அம்ரியா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. அப்பகுதியில் கூலித்தொழிலாளர்கள் சென்ற பேருந்தை நிறுத்திய சிலர் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில் பேருந்தில்இருந்த 15 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகேதான் விமான நிலையம் உள்ளது. சன்னி முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதியில்இந்தத் தாக்குதல் நடந்திருப்பதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+