அஸ்ஸாமில் தமிழக ராணுவ என்ஜினீயர் கடத்தல்
மதுரை:சிவகாசியை சேர்ந்த ராணுவ என்ஜினீயர் அஸ்ஸாமில் தீவிரவாதிகளால்கடத்தப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கணேசன் (38) அஸ்ஸாமில் ராணுவ என்ஜினீயராகபணியாற்றி வருகிறார். இந் நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகளால் அவர் கடத்தப்பட்டார்.
ஆனால் கணேசன் குறிந்த எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை. இதனால்கணேசனை பத்திரமாக மீட்டுத்தரக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமர்,குடியரசுத்தலைவர் ஆகியோருக்கு கணேசனின் மனைவி ரதிதேவி மனுஅளித்துள்ளார்.
கணேசன் கடத்தப்பட்டு இன்றுடன் 18 நாட்கள் ஆகிறது. இதற்கிடையில் தீவிரவாதிகள்அவ்வப்போது இரவு நேரத்தில் கணேசனின் வீட்டுக்கு போன் செய்து மிரட்டிவருகிறார்கள்.
நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் தீவிரவாதிகள் கணேசன் வீட்டுக்கு போன்செய்துள்ளனர். அப்போது ரதிதேவி போனை எடுத்து அழத் தொடங்கினார். இதனால்கோபம் அடைந்த தீவிரவாதிகள் வேறு யாராவது இருந்தால் எங்களது செல்போனுக்குதொடர்பு கொள் என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டனர்.
இதையடுத்து கணேசனின் உறவினர் தவிட்ராஜா தீவிரவாதிகளின் செல்போனுக்குதொடர்பு கொண்டார். அப்போது தீவிரவாதிகள் கண்ணீர் வடித்து புண்ணியம் இல்லை.கணேசனை விடுவிக்க வேண்டுமானல் உடனடியாக எங்களுக்கு ரூ. 3 கோடி ஏற்பாடுசெய்யுங்கள் என கூறி தொடர்பை துண்டித்து விட்டனர்.
இதுகுறித்து தவிட்ராஜா கூறியதாவது,
தீவிரவாதிகள் ஒரு செல்போனில் இருந்துதான் கணேசனின் வீட்டிற்கு தொடர்புகொண்டு வருகிறார்கள். இதுவரை இரவு நேரத்தில் மட்டும் செல்போனை சுவிட்ச் ஆன்செய்து பேசிவந்த தீவிரவாதிகள் நேற்று பகல் நேரத்தில் பேசினார்கள். அதோடுஎங்களையும் போன் செய்து பேசச் சொன்னார்கள்.
இப்படி சுற்றித்திரியும் தீவிரவாதிகள் எங்கு இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்கமுடியவில்லை என ராணுவத்தினர் சொல்லி வருவது வருந்தம் அளிக்கிறது என்றார்.
இந்நிலையில் 18 நாட்களாக தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் கணேசனைமீட்குமாறு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்த கோரி ராமேசுவரத்தில் இருக்கும்அவரது சகோதரரை சந்தித்து முறையிட ரதிதேவி முடிவு செய்துள்ளார். இதற்காகஅவர் நாளை ராமேசுவரம் செல்கிறார்.
உல்பா தாக்குதலில் மேலும் 7 பேர் பலி:
இந் நிலையில் அஸ்ஸாமில் உல்பா தீவிரவாதிகள் நேற்றிரவு நடத்திய புதிய தாக்குதலில் 7 பேர்கொல்லப்பட்டனர்.
கடந்த மூன்று நாட்களாக இரவுகளில் உல்பா நடத்தி வரும் தொடர் தாக்குதலில் இதுவரை 55 பேர்பலியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தி பேசும் வட மாநில தொழிலாளர்களை குறி வைத்து இந்தத் தாக்குதல்களை உல்பா நடத்தி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications