கிராமவாசிகள்-கம்யூ. மோதல்: 6 பேர் பலி
கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் பகுதியில் இந்தோனேசிய நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்குஎதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் போது அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்தொண்டர்கள் மோதியதால் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலம் மித்னாப்பூர் மாவட்டத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் நிறுவனம்தனது உற்பத்திப் பிரிவை தொடங்கவுள்ளது. இதற்காக அந்த நிறுவனத்திற்கு சிறப்பு பொருளாதார மண்டலப்பிரிவின் கீழ் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் மேற்கு வங்க அரசு இறங்கியுள்ளது.இதற்கு நந்திகிராமம், காங்க்ரா, சோனச்ரா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துபோராட்டத்தில் குதித்துள்ளனர்.
பூமி உச்செட் பிரோதி ன்ெற அமைப்பு இன்று நந்திகிராமில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்குமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராட்டம் நடத்திய கிராம வாசிகளுக்கும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இந்த மோதல் பின்னர் பெரும்வன்முறையாக மாறியது.
குண்டுகள் வீசியும், சரமாரியாகத் தாக்கியும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.பலர் படுகாயமடைந்தனர். சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடந்துள்ளன.
கிராமவாசிகளுடன் சேர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களும் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியினரைத் தாக்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.
நந்திகிராம் பகுதியில் நிலைமை பதட்டமாக உள்ளதாகவும், அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுவருவதாகவும் காவல்துறை தெ>வித்துள்ளது.
ஸ்டார் ஹோட்டலில் புகுந்த திரிணமூல் தொண்டர்கள்:
இதற்கிடையே, சிங்கூர், நந்திகிராம் பிரச்சினை தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், கொல்கத்தாவில்உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குள் புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பாச்சிம் ஸ்ரமாஜி, மகளிர் அணித் தலைவி அனுராதா தல்வார் ஆகியோரதுதலைமையில், தொண்டர்கள் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குள் புகுந்து திடீர் எனஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
மேற்கு வங்க அரசின் தொழிற் கொள்கையைக் கண்டித்து அவர்கள் குரல் எழுப்பியதால் அங்கு பரபரப்புஏற்பட்டது. இந்த ஹோட்டலில் புரூனே நாட்டு வர்த்தகக் குழு மேற்கு வங்கத்தில் செய்யவுள்ள மிகப் பெரியமுதலீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து இங்கு போராட்டம்நடத்தப்பட்டதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெ>வித்தது.
ஹோட்டலுக்குள் நுழைவதற்கு முன் தொண்டர்கள் அங்கிருந்த காவலாளிகளை அடித்து உதைத்தனர். ஆனால்ஹோட்டலுக்குள் அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. பொருட் சேதமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் மதன் மித்ரா தலைமையில், முதல்வர் வீட்டை நோக்கி இன்னொரு திரிணமூல் காங்கிரஸ்தொண்டர் குழு முன்னேறியது. இருப்பினும் அவர்களை போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தி விட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications