3 வாலிபர்கள் உடல் தோண்டியெடுப்பு!
கடலூர்:கடலூர் அருகே சேத்தியாத்தோப்பு பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட வாலிபர்களின் உடல்கள்தோண்டி எடுக்கப்பட்டன. அந்த வாலிபர்களின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் உறவினர் கதறிஅழுதனர்.
![]() |
கடலூர் மாவட்டம் அனுக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். வழிப்பறி, கொள்ளைகளில் ஈடுபட்டுவந்தார். அவருடைய நண்பர் திருஞானம். இந்த திருஞானத்தின் நண்பர்கள் ஆனந்தன், தமிழரசன் ஆகியோர்.
ஒரு பெண்ணை ஆனந்தன் காதலித்தார். இதற்கு அந்த பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்அந்த பெண்ணைக் கடத்தி திருமணம் செய்வதற்காக திருஞானத்தின் உதவியை ஆனந்தன் நாடினர். இதையடுத்துவிமல்ராஜின் உதவியை திருஞானத்தின் நண்பர்கள் கேட்டனர். தனக்கு உதவி செய்தால், பதிலுக்கு உதவிசெய்வதாக அவர்களிடம் விமல்ராஜ் கூறியுள்ளார். அதற்கு திருஞானம் சம்மதிக்கவில்லை.
![]() |
இதானல் இவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதைதிருஞானமும், அவருடைய நண்பர்களும் போலீசில் கூறிவிடுவர்கள் என நினைத்த விமல்ராஜ் அவர்களைகொலை செய்ய திட்டமிட்டான்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி திருஞானம், தமிழரசன், ஆனந்தன் ஆகியோர் மோட்டர்சைக்கிளில் அனுக்கம்பட்டு கிராமத்துக்கு சென்று விமல்ராஜை சந்தித்தனர்.
அப்போது அவர்களுக்கு மது கொடுத்து போதை ஏறியதும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 3 பேரையும் வெட்டிகொலை செய்தான். பின்னர் தனது வீட்டின் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் குழி தோண்டி 3 பேரையும்அதில் புதைத்தான். மோட்டர் சைக்கிளை வேறு ஒரு இடத்திலும் புத்ைத்தான்.
இந்நிலையில் சமீபத்தில் சேத்தியாத்தோப்பில் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விமல்ராஜைபோலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் போலீஸார் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியபோது தான் 3 கொலைகள்செய்துள்ளதாக திடுக்கிடும் தகவலைக் கூறினார் விமல்ராஜ். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அதுகுறித்துவிமல்ராஜிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து ஆனந்தன், தமிழரசன், திருஞானம் ஆகிய 3 பேரைக் கொலை செய்து ஒரே குழியில்அவர்களைப் புதைத்து விட்டதாக விமல்ராஜ் தெரிவித்தார். அனுக்கம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு கரும்புத்தோட்டத்தில் அவர்களது உடல்களைப் புதைத்துள்ளதாகவும் விமல்ராஜ் கூறினார்.
இதையடுத்து விமல்ராஜை அந்த இடத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு ஒரே குழியில்புதைக்கப்பட்டிருந்த வாலிபர்களின் உடல்களை போலீசார் தோண்டி எடுத்தனர். இதில் அவர்களின் உடைகளும்,எலுப்புக் கூடும் கிடைத்தது.
தோண்டி எடுக்கப்பட்ட எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளை சென்னைக்கு கொண்டு சென்று வாலிபர்களின்படத்துடன் ஒப்பிட்ட பார்க்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மூன்று வாலிபர்களையும் கொலை செய்ய உதவியாக இருந்த விமல்ராஜின் கூட்டாளிகளில் ஒருவரானகாரைக்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ், மற்றொரு கொலை வழக்கில் கடலூர் மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளான்.
மேலும் விமல்ராஜின் கூட்டாளிகளான சென்னையை சேர்ந்த மகேஷ், அனுக்கம்பட்டை பனங்காடு பகுதியைசேர்ந்த சொட்டக்குமார் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.














Click it and Unblock the Notifications