அதிமுக அவைத் தலைவராகிறார் பொன்னையன்?
சென்னை:சென்னையில் வருகிற 30ம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக்கூட்டங்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட்டியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் முதல் முறையாக கூடும் பொதுக்குழுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக செயற்குழுமற்றும் பொதுக் குழுக் கூட்டங்கள் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குவட பழனியில் உள்ள விஜய சேஷ மஹாலில் நடைபெறும்.
உறுப்பினர்கள் அனைவருக்கும் இதுதொடர்பாக தனித் தனியே அழைப்பிதழ்கள்அனுப்பப்பட்டுள்ளன. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றுகூறியுள்ளார்.
பொன்னையனுக்கு அவை தலைவர் பதவி?
தேர்தல் தோல்விக்குப் பின் கூடும் முதல் பொதுக் குழுக் கூட்டம் என்பதால் அதில்எடுக்கப்படும் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
![]() |
கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை அதிரடியாக மாற்றி வரும் ஜெயலலிதா இந்தபொதுக்குழுவில் கட்சிக்குப் புத்துயிர் கொடுக்கும் பல்வேறு அறிவிப்புகளைவெளியிடுவார் எனத் தெரிகிறது.
ஏற்கனவே பல மாவட்ட நிர்வாகிகளை கூண்டோடு மாற்றியுள்ளார் ஜெயலலிதா.மேலும் பல மாவட்டங்களின் நிர்வாகிகளும் மாற்றப்படவுள்ளனர்.
செயற்குழுக் கூட்டத்தில், புதிய அவைத் தலைவரை தேர்ந்தெடுக்கவும் ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளார். அவைத் தலைவராக இருந்து வந்த காளிமுத்து மரணமடைந்ததால்,புதிய அவைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.
இப்பதவிக்கு யார் வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சியில் வலுத்துள்ளது.முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்ஆகியோரது பெயர்கள் இப்பதவிக்கு அடிபடுகின்றன.
அதேசமயம், சட்டசபைத் தேர்தலோடு ஒதுங்கி விட்ட முன்னாள் நிதியமைச்சர்பொன்னையனுக்கு அவைத் தலைவர் பதவியை ஜெயலலிதா கொடுக்கலாம் என்றஎதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களுக்கு முன்பே அவைத் தலைவரை ஜெயலலிதாஅறிவிக்கலாம். அவரது தலைமையில்தான் கூட்டம் நடைபெறும் என்கிறார்கள்.













Click it and Unblock the Notifications