ஏலச்சீட்டு-ரூ. 50 லட்சம் மோசடி-மூவர் கைது
சென்னை:ஏலச்சீட்டு நடத்தி ரூ. 50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
![]() |
சென்னை அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த செங்கல்வராயன் (60), அவரதுமனைவி ரங்கநாயகி (50), மகள் வரலட்சுமி (26), மகன் சரவணக்குமார் (24).
ரங்கநாயகி கடந்த 10 ஆண்டுகளாக அய்யப்பந்தாங்கல் பகுதியில் ஏலச்சீட்டு நடத்திவந்தார். மாதத் தவணையை வசூல் செய்ய ரங்கநாயகிக்கு செங்கல்வராயனும்,சரவணக்குமாரும் உதவி செய்து வந்தனர்.
இந்நிலையில், சீட்டு கட்டி வந்த 30 போர் கடந்த ஆண்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தனர். அதில் நாங்கள் 30 பேரும் ரங்கநாயகியிடம் ரூ. 50லட்சத்துக்கும் மேல் ஏலச்சீட்டு கட்டி வந்தோம். சீட்டுத் தொகை முதிர்ச்சி அடைந்தபிறகும் எங்களுக்கு பணம் தரவில்லை. உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் லத்திகா சரணுக்கு நீதிபதிஉத்தரவிட்டார். இதுகுறித்து விசாரிக்க மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு லத்திகாஉத்தரவிட்டார்.
இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. ரங்கநாயகி,செங்கல்வராயன், சரவணக்குமார் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 25க்கும் மேற்பட்டபெண்கள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள்கூறியாதவது,
செங்கல்வராயன் குடும்பத்தினர் ஒரு குடிசை வீட்டில் இருந்தனர். பின் ஏலச்சீட்டுநடத்தி எங்கள் பணத்தில் அய்யப்பன்தாங்கல் மற்றும் திருவளுரில் 2பிரம்மாண்டமான அடுக்குமாடி வீடுகளை கட்டியுள்ளனர்.
மேலும் செங்கல்வராயன் மகள் வரலட்சுமிக்கும், மகன் சரவணக்குமாருக்கும் வெகுவிமரிசையாக திருமணம் செய்து வைத்தனர். செங்கல்வராயனின் சொத்துக்களைபறிமுதல் செய்து எங்கள் பணத்தை திருப்பிக் கொடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கூறினார்.













Click it and Unblock the Notifications