தமிழக என்ஜீனியரை விடுவிக்க தீவிரவாதிகள் கெடு
மதுரை:அஸ்ஸாமில் கடத்தப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த என்ஜீனியரை விடுவிக்க தீவிரவாதிகள் கெடுவிதித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கணேசன் (38), ராணுவத்தில் பொறியாளராக உள்ளார். அஸ்ஸாமில்பணியாற்றி வந்த இவர் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்கவேண்டுமானால் ரூ. 3 கோடி கொடுக்க வேண்டும் என்று கணேசன் மனைவி ரதிதேவிக்கு தீவிரவாதிகள் தகவல்அனுப்பி மிரட்டியுள்ளனர்.
![]() |
இதையடுத்து கணேசன் குடும்பத்தினர் சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து கணேசனைமீட்டுத்தர கோரி மனு கொடுத்தனர். முதல்வரும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.மேலும் ரதிதேவி விருதுநகர் வந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமிடமும் மனு கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் ரதிதேவியை தொடர்பு கொண்ட தீவிரவாதிகள் உங்கள் கணவர்உயிரோடு வர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லையா. நாங்கள் கேட்கும் பணத்தை தராவிட்டால்விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும். இது தான் உங்களுக்கு கடைசி கெடு என எச்சரித்தனர்.
மேலும் நாங்கள் இவ்வளவு கூறியும் அரசாங்கத்தில் இருந்து இதுவரை எங்களிடம் யாரும் பேசவில்லை எனதீவிரவாதிகள் கூறினார்கள்.
அப்போது ரதிதேவி நாங்கள் சாதாரண விவசாய குடும்பம். எங்களால் முடிந்தவரை முயற்சிகள் செய்துவருகிறோம். குடியரசுத்தலைவர் வரை நாங்கள் முறையிட்டு விட்டோம். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாககூறியுள்ளனர். ஆனால் நீங்கள் யாரும் பேசவில்லை என்று கூறுகிறீர்கள். இதற்கு மேல் நாங்கள் என்ன செய்வதுஎன்று எங்களுக்கு புரியவில்லை என்றார்.
எனது கணவரை என்னுடன் பேச அனுமதியுங்கள் என்றும் ரதிதேவி கோரினார். ஆனால் அதற்கு தீவிரவாதிகள்ஒத்துக்கொள்ள மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் தனது கணவரை விடுவிக்க கோரி குடியரசுத் தலைவரின் சகோதரரை சந்தித்து முறையிடுவதற்காகஇன்று ரதிதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் ராமேஸ்வரம் செல்கின்றனர்.
சிவராஜ் பாட்டீலுக்கு வைகோ கடிதம்:
இதற்கிடையே தமிழக என்ஜினீயர் கடத்தப்பட்டது குறித்தும் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும்மத்திய உள்துறை அமைச்சர் சிவாராஜ் பாட்டீலுக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு சிவராஜ் பாட்டீல் அனுப்பிய பதில் கடித்தில், கடந்த 22ம் தேதி தமிழக என்ஜினீயர் கணேசன்கடத்தப்பட்டது தொடர்பாக தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. இதுதொடர்பாக மத்திய அரசின் உள்துறைசெயலாளர், அஸ்ஸாம் காவல் துறைத் தலைவரிடம் பேசி வருகிறார். அஸ்ஸாம் காவல் துறையினர் என்ஜினீயர்கணேசனைக் கண்டு பிடிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது என கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications