தீபாவளி வேண்டாம்-பொங்கல் கொண்டாடுங்கள்
சென்னை:பெரியார் சிலைகளையும், ஆன்மீக தலைவர்கள், கடவுள் சிலைகளையும் சேதப்படுத்துவோரை அரசு வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் வள்ளுவர்விருது க.ப.அறவாணனுக்கும், பாரதியார் விருது தமிழருவி மணியனுக்கும், பாரதிதாசன் விருதுகா.செல்லப்பனுக்கும், திரு.வி.க. விருது க.திருநாவுக்கரசுக்கும், அம்பேத்கர் விருது தொல். திருமாவளவனுக்கும்,பெரியார் விருது நடிகர் சத்யராஜுக்கும், காமராஜர் விருது ஏ.எஸ். பொன்னம்மாளுக்கும், அண்ணா விருதுஆர்.எம்.வீரப்பனுக்கும் வழங்கப்பட்டது.
விருதுகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசுகையில், வசை பாடியவர்களுக்கு விருது அளித்திருக்கிறேன்என்று இங்கு பேசியவர்கள் கூறினார்கள். வசை பாடியவர்கள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்துவிட்டுள்ளனர் என்ற நம்பிக்கை கொண்டவன் நான்.
இரும்புத் துண்டை சுத்தியலால் அடித்துக் கொண்டே இருந்தால் அது கோபப்படாது. கடையாணி,அச்சாணியாக்குவதற்குத்தான் என்று எடுத்துக் கொள்ளும். அதைப் போல யார் என்னை வசை பாடினாலும் ஒருவண்டிக்கு, சக்கரத்துக்கு அச்சாணியாக்க நீங்கள் செய்த உதவிதான் என்று எடுத்துக் கொள்வேன்.
அன்று மன்னர்கள் ஆட்சியில் பரிசில்கள், கொடுத்த வரலாறு உள்ளது. இது தமிழர் பண்பாடு. கலிங்கத்துப்பரணியில், கரிகால் சோழன் 16 லட்சம் பொன் கொடுத்ததாக கூறப்பட்டள்ளது. நான் ஆளுக்கு ஒரு லட்சம் என்று8 லட்சம் கொடுத்திருக்கிறேன். அன்று அரசன் கொடுத்தான். இன்று அரசு கொடுக்கிறது.
நன்றி மறக்க மாட்டோம் என்று விருது பெற்றவர்கள் கூறினார்கள். நன்றி மறபப்வர்களும் தமிழ்நாட்டில்இருக்கிறார்களே. தமிழ்நாட்டில் இல்லை, இருக்கக் கூடாது என்ற அழுத்தமான கருத்து உள்ளவன் நான்.
நன்றி மறந்தவர்களும், மீண்டும் உண்மையை உணர்ந்து நம்முடைய கருத்தை ஏற்றுக் கொண்டு, நம்முடன்இணைந்து பொதுத் தொண்டு, தமிழுக்கு தமிழ் சமுதாயத்துக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்றவருவார்களேயானால் அவர்கள் நன்றி மறந்தவர்களாக இருந்தாலும் அதை நான் மறக்கத் தயாராக இருக்கிறேன்.
பெரியார் எதிர்ப்பாலேயே வளர்ந்தார். இன்றும் பெரியார் சிலைக்கு எதிர்ப்பு இருக்கிறது. பெரியார் சிலையைசேதப்படுத்துபவர்களையும் அதன் எதிரொலியாக ஆன்மீக வாதிகள், கடவுள் சிலைகளை சேதப்படுத்துவதையும்நான் ஆதரிக்கவில்லை.
பெரியார் சிலைகளை சேதப்படுத்துவோர் எப்படி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்களோஅதேபோல மற்றவர்களும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்.
பெரியார் பெரியபுராணம், கம்பராமாயாணத்தை கொளுத்த நாள் குறித்தார். அப்போது ஆர்.கே.சண்முகம்செட்டியார் விளைவுகளை எண்ணிப் பாருங்கள் என்று பெரியாருக்கு வேண்டுகோள் விடுத்தார். எண்ணிப்பார்த்தார், கொளுத்தியே தீருவேன் என்று இல்லாமல் அமைதி முக்கியம் என்று தன் போராட்டத்தை விலக்கிக்கொண்டார்.
எனவே இரு தரப்பினரையும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், உங்கள் கொள்கைகளை அமைதியாக ,கருத்துக்குக் கருத்து , கொள்கைக்கு கொள்கை, லட்சியத்திற்கு லட்சியம் என்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.வன்முறை, அராஜகம், பெரியார் கொள்கைக்கு நல்லதல்ல, நாட்டுக்கு நல்லதல்ல. சட்டப்படி நடக்க அரசுதயங்காது.
பொங்கல் பண்டிகையை தீபாவளி அல்ல. அதற்காக தீபாவளியை கொண்டாட வேண்டாம் என நான் சொல்லமாட்டேன். ஆனால் பொங்கல், செத்ததற்காக எடுக்கப்படும் விழா அல்ல. சாகாமல் இருக்க, தமிழன்வாழ்வதற்கான விழா. பொங்கல் விழாவை அத்தனை பேரும் கட்சிகளை மறந்து கொண்டாட வேண்டும். பெருந்திருவிழாவாக கொண்டாட வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications