இலங்கையில் பிரணாப் முகர்ஜி
டெல்லி:வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கை சென்றார்.
வரும் 3ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை அதிபர் மகிந்தாராஜபக்சேவுக்கு முகர்ஜி நேரில் அழைப்பு விடுக்கவுள்ளார்.
இந்த பயணத்தின்போது புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவது குறித்து ராஜபக்சே மற்றும்பிரதமர் விக்ரமநாயகே, வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா ஆகியோருடன் முகர்ஜி ஆலோசனை நடத்த உள்ளார். மேலும்வடக்கு-கிழக்கு மாகாணங்களை பிரித்ததற்கு இந்தியாவின் எதிர்ப்பையும் முகர்ஜி தெரிவிப்பார் என்று தெரிகிறது.
வட கிழக்கில் நிலவும் அசாதாரணமாக சூழல், தமிழர்கள் உணவின்றி தவிப்பது, இதனால் இலங்கைக்கு எதிராக தமிழகத்தில்எழுந்துள்ள எதிர்ப்பு ஆகியவை குறித்தும் அவர் விவாதிக்கவுள்ளார்.
முகர்ஜியுடன் டி.ராஜா சந்திப்பு:
முன்னனதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான டி.ராஜா நேற்று முகர்ஜியைசந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
யாழ்பாணத்தில் பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு இந்தியா உணவு அனுப்ப வேண்டும், அது முறையாகவினியோகிக்கப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும், அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறுஇலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என ராஜா கேட்டுக் கொண்டார்.
மருத்துவமனை மீது தாக்குதல்: 3 தமிழர்கள் பலி
இந் நிலையில் வாகரையில் உள்ள மருத்துவமனை மீது இலங்கை ராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 3 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அமைதிச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கில் உள்ள வாகரை நகர் மீது ராணும் தொடர்ந்துகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் மருத்துவமனை சேதமடைந்தது. அங்கிருந்த 3 அப்பாவிகள் பலியாயினர். 11 பேர் காயமடைந்தனர்.
தாக்குதலில் மருத்துவமனையின் மேல் கூரை சேதமடைந்து விட்டது. இங்கு தங்கியிருந்தவர்கள் அனைவருமே ராணுவத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுஅடைக்கலம் புகுந்தவர்கள்தான்.
நார்வே தூதுக் குழுவினரையோ அல்லது உதவி அமைப்புகளையோ இப்பகுதிக்குள் செல்ல விடாமல் இலங்கை படைகள் தடுத்து நிறுத்தி விட்டன. எனவேஉயிர்ப் பலி எத்தனை என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
கொழும்பு அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் குண்டு வைத்ததுத் தகர்ப்பட்ட சில மணி நேரங்களில் இந்த தாக்குதலை இலங்கை ராணுவம் மேற்கொண்டுள்ளது.
பஸ் குண்டுவெடிப்பு: புலிகள் மறுப்பு
இதற்கிடையே கொழும்பு அருகே நடந்த இரு பேருந்து குண்டவெடிப்புச் சம்பவங்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும்இல்லை என விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.
இலங்கையின் தென் பகுதியில் உள்ள நிட்டம்புவா மற்றும் தெல்வட்டா ஆகிய இரு இடங்களில் நடந்த இரு வேறு பேருந்துக்குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பலர் பலியாகினர். இந்த சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என இலங்கைஅரசும், பாதுகாப்புப் படையினரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இதை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராணுவ விவகார செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில், இது அடிப்படையற்ற பொய்யான குற்றச்சாட்டு. விடுதலைப் புலிகள் இயக்கம் மீது அவதூறு ஏற்படுத்தும்முயற்சியாக இந்த புகாரை அரசு கூறியுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற முறையில், அடக்குமுறையைக் கையாண்டு, தமிழ் மக்கள் மீது வெறித் தாக்குதல்நடத்தி கொன்று குவித்து வரும் இலங்கை இனவாத அரசு, அதை திசை திருப்ப இப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது என்றுகூறியுள்ளார்.
இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக அதிபர் ராஜபக்ஷே கூறுகையில், அரசின் சமாதான முயற்சிகளை முறியடிக்கும்வகையில் இந்த தாக்குதல்கள் உள்ளன. நிட்டம்புவா, தெல்வட்டா ஆகிய இடங்களில் நடந்த பேருந்து குண்டுவெடிப்புச்சம்பவங்களில் விடுதைலப் புலிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் தென் பகுதியில், இனக் கலவரம் ஏற்படும் அபாயம்உருவாகியுள்ளது. எனவே அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காவல்துறைக்கும்,பாதுகாப்புப் படையினருக்கும் மிகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக கொழும்பு குண்டுவெடிப்பு தொடர்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவர் அவசர ஆலோசனைநடத்தினார்.












Click it and Unblock the Notifications