எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் பதவி: ராஜபக்ஷே
கொழும்பு:எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தர இலங்கை அதிபர் ராஜபக்ஷேதிட்டமிட்டுள்ளார்.
இலங்கை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. எதிர்க்கட்சியினரும்அமைச்சரவையில் இடம்பெறவுள்ளனர்.
இலங்கையில் அதிபர் ராஜபக்ஷே அரசு சிறுபான்மை அரசாக உள்ளது. அரசுக்குஆதரவு கொடுத்து வந்த சில முக்கிய கட்சிகள் அமைச்சரவையிலிருந்து விலகியதால்ராஜபக்ஷே அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது.
இதையடுத்து முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, சிறுபான்மை தமிழர்மற்றும் முஸ்லீம் கட்சிகளை கூட்டணியில் இழுக்க அரசு முயன்றது. ஐக்கிய தேசியக்கட்சியுடன் சமீபத்தில் ராஜபக்ஷே இதுதொடர்பாக ஒப்பந்தமும் போட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க ராஜபக்ஷேமுடிவு செய்துள்ளார். இதையடுத்து அமைச்சரவை விரிவுபடுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து அதிபர் மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,எதிர்க்கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவுள்ளது.இதுதொடர்பான நடவடிக்கையில் அதிபர் ராஜபக்ஷே இறங்கியுள்ளார் என்றார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பிக்கள் உள்ளனர். இதில் ராஜபக்ஷேகட்சிக்கு 70 எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர். ஆட்சி கவிழ்வதைத் தடுக்கும்முகமாகவே எதிர்க்கட்சியினருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்குஅமைச்சர் பதவிகளைக் கொடுத்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில்இறங்கியுள்ளார் ராஜபக்ஷே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications