திக் திக் சூழலில் நாளை மதிமுக பொதுக்குழு

Subscribe to Oneindia Tamil

சென்னை:பரபரப்பான சூழலில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை சென்னையில்நடைபெறுகிறது. இக் கூட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வைகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அவைத் தலைவர் எல்.கணேசன்,துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கம்பத்தில் நடந்தமதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி கட்சியைவிட்டு நீக்கப்பட்டனர்.

ஆனால் இந்த நீக்கத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் இருவரும் இடைக்காலத் தடைவாங்கினர். இதைத் தொடர்ந்து சேலத்தில் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்படும் எனஇருவரும் அறிவித்தனர். அதன்படி சேலத்தில் நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில்,வைகோவை கட்சியை விட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பொதுச்செயலாளராக செஞ்சி ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் போட்டி மதிமுக இணையலாம் என்று திமுகஉயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் பகிரங்கமாக அழைப்பு விடப்பட்டது.இதை திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியும் வழிமொழிந்தார்.

இதையடுத்து நேற்று தஞ்சையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக கூட்டணியில்இணைந்து செயல்படுவது என எல்.கணேசன் தரப்பு முடிவு செய்தது.

இந்தப் பின்னணியில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை சென்னையில்நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு அண்ணா நகரில் உள்ள விஜஸ்ரீமஹால்கல்யாண மண்டபத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. வைகோ தலைமைதாங்குகிறார்.

மதிமுக பொதுக் குழுவில் 1,530 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் கட்சி விரோதநடவடிக்கையால் நீக்கப்பட்டவர்கள் போக மொத்தம் 1,406 பேர் உள்ளனர்.அவர்களில் 1,300க்கும் மேற்பட்டோர் தங்கள் பக்கம் உள்ளதாக வைகோ தரப்புகூறுகிறது.

நாளைய பொதுக்குழுக் கூட்டத்தில் எல்.கணேசன், செஞ்சி மீது மேலும் கடுமையானநடவடிக்கைகள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இதுதவிர மேலும் சில முக்கியதீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. புதிய அவைத் தலைவரும் இக்கூட்டத்தில்தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

அனேகமாக பொருளாளர் கண்ணப்பன் புதிய அவைத் தலைவராகக் கூடும். மதிமுககொள்கை விளக்க அணியின் செயலாளராக இருக்கும் நாஞ்சில் சம்பத்துக்கு முக்கியப்பொறுப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

பொதுக் குழுக் கூட்டத்தை சீர்குலைக்க எல்.கணேசன் தரப்பும், திமுகவும் முயல்வதாகவைகோ குற்றம் சாட்டியுள்ள நிலையில் பெரும் பரபரப்பு பிளஸ் எதிர்பார்ப்புக்குமத்தியில் நாளைய மதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு:

இந் நிலையில் சென்னையில் நாளை நடைபெறும் மதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும்வைகோ, எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வைகோ கூட்டிய பொதுக் குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி சைதை ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தனது மனுவில், வைகோ கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். எனவே அவரால் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டமுடியாது. எனவே இந்த பொதுக்குழுக் கூட்டம் சட்டவிரோதமானது என்று கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசனும், பொதுச் செயலாளர் செஞ்சிராமச்சந்திரனும் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வைகோவின் அறிவிப்பு மதிமுகவினரை குழப்பமடைய வைத்துள்ளது. இதனால் கட்சியின் மதிப்பு கெடும். எனவே வைகோ கூட்டியுள்ளபொதுக் குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி தணிகாச்சலம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ரவி சார்பில் முன்னாள் அட்வகேட் ஜெனரலான கே.வி.வேங்கடபதியும், வைகோ சார்பில் டிவி. ராமானுஜம், ஜெயராமன் ஆகியோர் ஆஜராகினர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தணிகாச்சசலம், இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டார். மேலும், வைகோவுக்கு விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் எதிர் மனுதாரர்களாக எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் பெயர்களை ரவி சேர்த்திருந்ததால், அவர்களுக்கும்நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

1,329 பொ.கு. உறுப்பினர்கள் வழக்கு:

இதற்கிடையில் சைதை சம்பத் தாக்கல் செய்த வழக்கில் தங்களையும் சேர்க்கக் கோரி வைகோ ஆதரவு மதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 1,329பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதுகுறித்து மதிமுக சட்டப் பிரிவு செயலாளர் தேவதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கண்ணப்பன் ஆகியோர் மீது சைதை பகுதி செயலாளராக இருந்த சைதை ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கம்பம் நகரில் நடந்த மதிமுக கூட்டத்தில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரனை நீக்க தீர்மானம் போடப்பட்டதுசெல்லாது என்று அறிவிக்கக் கோரியுள்ளார்.

இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என 1,329 பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்துள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் மதிமுக தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் வருகிற 12ம் தேதி விசாரணைக்கு வருவதால் அன்றேஇந்த மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது என்று கூறியுள்ளார் தேவதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+