வீட்டில் தனியே இருந்த பெண் கொலை- வேலைக்கு வந்த பெண் கழுத்தை அறுத்து கொலை
திருநெல்வேலி:பாளையங்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு அவர்அணிந்திருந்த 20 பவுன் நகைகளை கொள்ளையடித்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]() |
பாளையங்கோட்டை பெருமாள்புரம் சாராள் டக்கர் கல்லூரி ஜோசப் தெருவில் சபையர் கிங் என்றஅபார்ட்மென்ட் உள்ளது. இதன் தரைத் தளத்தில் உள்ள 6வது வீட்டில் வசிப்பவர் வெங்கட சுப்ரமணியன்.
டிராக்டர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 37).இவர்களுக்கு அபிநயா, ஷோபனா, உத்ரா என மூன்று மகள்கள் உள்ளனர்.
வெங்கடசுப்ரமணியன் வேலைக்குப் போய் விட்டார். 3 மகள்களும் பள்ளிக்கூடத்திற்குப் போய் விட்டனர்.வீட்டில் விஜயலட்சுமி மட்டும் தனியாக இருந்தார்.
வீட்டின் பின் பகுதியில் அவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்விஜயலட்சுமியை கத்தியால் குதிக் கொலை செய்தார். பின்னர் அவர் அணிந்திருந்த 20 பவுன் தங்க தாலிச்சங்கிலி, வளையல்கள், தோடு ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினார்.
மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த வெங்கடசுப்ரமணியன் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருப்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து இன்னொரு சாவி மூலம் வீட்டை திறந்து உள்ளே போனபோது விஜயலட்சுமிகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
சேலம்: பட்டப்பகலில் இளம்பெண் கொலை
இந் நிலையில் சேலம் அருகே இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
![]() |
சேலம் அருகே உள்ள பள்ளத்தாதனூரை சேர்ந்த சுமதி (30). இவர் அயோத்தியாப்பட்டணத்தில் இருக்கும் வணிகவளாகத்தில் தனியார் ஆயத்த ஆடை கடை ஒன்றில் டெய்லராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வணிக வளாகத்தில் உள்ள படிக்கட்டுகள் வழியாக கடைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருடன் வந்த ஒரு வாலிபர் திடீரென சுமதியின் கழுத்தை அறுத்தார். இதில் சுமதிசம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த வாலிபர் தப்பிஓடி விட்டார்.
சுமதியின் கொலைக்கு கள்ளத் தொடர்பு காரணமா அல்லது முன் விரோதமா என்று தெரியவில்லை. சுமதியின்உடலை கைப்பற்றிய போலீஸார், இது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர். சுமதி ஒரு மாதத்துக்கு முன்புதான் இந்த கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications