நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி
சென்னை:4 செயற்கைக் கோள்களுடன் ஏவப்படவுள்ள பி.எஸ்.எல்.வி-சி7 ராக்கெட்டுக்கான கவுண்டவுன் தொடங்கியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் நாளை (10ம் தேதி) விண்ணில் ஏவப்படவுள்ளபிஎஸ்எல்விக்கான கவுண்டவுன் நேற்று காலை 5.58 மணிக்கு தொடங்கியது. நாளை காலை 9.30 மணியளவில்இது விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கவுண்டவுன் சீராக சென்று கொண்டிருப்பதாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையவளாகத்தில் உள்ள மிஷன் கண்ட்ரோல் மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி ஜிஎஸ்எல்வி- எப்02 என்ற ராக்கெட்டை ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது.அதன் பின்னர் ஏவப்படும் முதல் ராக்கெட் இதுதான். எனவே பி.எஸ்.எல்.வி. சி7 ராக்கெட்டை வெற்றிகரமாகஏவ விஞ்ஞானிகள் படு கவனமாக இருக்கிறார்கள்.
10ம் தேதி ஏவப்படவுள்ள பிஎஸ்எல்வி ராக்கெட், நான்கு செயற்கைக் கோள்களை எடுத்துச் செல்லவுள்ளது.
இந்தியாவின் கார்டோசாட்-2 (680 கிலோ எடை கொண்ட தொலை உணர்வு செயற்கைக் கோள்), 550 கிலோஎடை கொண்ட ஸ்பேஸ் கேப்சூல் ரெக்கவரி சோதனை சாதனம், இந்தோனேசியாவின் லபான்-டுபாசாட்செயற்கைக் கோள், அர்ஜென்டினாவின் 6 கிலோ எடை கொண்ட பெஹ்யூன் சாட் செயற்கைக் கோள் ஆகியவைராக்கெட்டில் எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இந்திய ராக்கெட் மூலம் நான்கு செயற்கைக் கோள்கள் எடுத்துச் செல்லப்படுவது இதுவே முதல் முறையாகும்.இதில் முக்கியமானது எஸ்.ஆர்.இ. எனப்படும் ஸ்பேஸ் ரெக்கவரி சோதனை சாதனம்.
இது விண்வெளிக்குச் சென்று விட்டு மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமிக்குத்திரும்புகையில், ஸ்ரீஹரிகோட்டா அருகே உள்ள கடல் பகுதியில் செயற்கைக் கோள் விழும்படிவடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் இதை பலமுறை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணுக்கு சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையிலான விண்வெளி ஓடங்களைத் தயாரிக்கும்இந்தியாவின் கனவுக்கு இந்த சோதனை முயற்சி மிகவும் உதவியாக இருக்கும்.
இதற்கிடையே, திருப்பதிக்கு வந்திருந்த இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் அங்கு செய்தியாளர்களிடம்பேசுகையில், பி.எஸ்.எல்.வி.யை ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. திட்டமிட்டபடி ராக்கெட் ஏவப்படும்.முதல் ஏவு தளத்திலிருந்து 10ம் தேதி காலை 9.23 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications