பக்தர்களை கத்தியால் குத்திய சாமியார்!
திருவண்ணமாலை:திருவண்ணாமலையில் தன்னிடம் ஆசிர்வாதம் வாங்க வந்த பக்தர்களை சாமியார் ஒருவர் சரமாரியாக கத்தியால்குத்தியதால் பீதியடைந்த பக்தர்கள் விழுந்தடித்து ஓடி உயிர் தப்பினர்.
திருவண்ணாமலை மலையில் ஏகப்பட்ட சாமியார்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் மலை உச்சியில் வசிக்கிறார்.அவருக்கு நிறைய பக்தர்களாம். கார்களைப் போட்டுக் கொண்டு இந்த சாமியாரைப் பார்க்க பக்தர்கள்வருகிறார்கள்.
சீடர்கள் மற்றும் பக்தர்கள் தரும் பால், கடலை போன்றவற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து வருகிறாராம் இந்தசாமியார். இவரை பார்ப்பதற்காக சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த எத்திராஜ் என்பவர் தனது மகன்அப்புராஜ், லண்டனைச் சேர்ந்த சிவசண்முகம் ஆகியோருடன் திருவண்ணாமலைக்கு வந்தார்.
மலை அடிவாரத்தில் ஹோட்டலில் தங்கிய அவர்கள், சாமியா>ன் சீடரான கன்னியப்பன் என்பவருடன் மலைக்குசென்றனர். சாமியா>ன் இருப்பிடத்தை அடைந்ததும், அவரைப் பார்த்து எத்திராஜ், அய்யா சாமி வணக்கம் என்றுகூறியுள்ளார். இது சாமியாரின் காதுக்கு அய்யப்ப சாமி வணக்கம் என்று தப்பாக கேட்டு விட்டது போலும்.
உடனே கோபமடைந்த சாமியார், அய்யப்ப சாமியை பார்க்க ஏன்டா இங்கே வந்தாய் என்று ஆவேசமாககேட்டபடி, கத்தியை எடுத்து எத்திராஜைக் குத்தினார். இதைப் பார்த்ததும் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துஎழுந்தே வெளியே ஓடினர். ஆனால் சாமியாரோ ஆவேசம் தணியாதவராக எழுந்து விரட்டத் தொடங்கினார்.
இதில் கார் டிரைவர் பூபதி சாமியாரிடம் சிக்கிக் கொண்டார். அவரை காலில் வெட்டினார் சாமியார். அதன்பின்னர் அவரும் எப்படியோ தப்பி வெளியே ஓடிவந்தார். ஓடும்போது சிவசண்முகம் மலைப் பள்ளத்தில்விழுந்து உருண்டார். பின்னர் ஒரு வழியாக அத்தனை பேரும் அங்கிருந்து தப்பி அடிவாரத்தை அடைந்தனர்.
ஆசிர்வாதம் வாங்க வந்த பக்தர்களை கத்தியால் குத்திய சாமியாரின் செயல் திருவண்ணாமலையில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications