சென்னையை தகர்க்க தீவிரவாதிகள் சதி!!
சென்னை:சென்னை மாநகரில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தி பெரும் நாசத்தை விளைவிக்க திட்டமிட்டிருந்ததாகடெல்லியில் கைதாகியுள்ள இரண்டு தீவிரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
டெல்லியில் கடந்த டிசம்பர் 31ம் தேதி அகமது அலி ஷேக், சமியுல்லா ஷேக் ஆகிய இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.இருவரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், அண்ணன் தம்பிகள், லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள்.
இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது தென் மாநிலங்களில் நாச வேலைகளில் ஈடுபட இவர்கள்திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இருவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சியை முடித்துக்கொண்டு டெல்லி வந்த இவர்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.
டெல்லி கன்னாட் பிளேஸ் மார்க்கெட் பகுதியில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் அங்கு குண்டு வைக்கத்திட்டமிட்டனர். பொம்மைகளுக்குள் குண்டுகளை வைக்க அவர்கள் திட்டமிட்டனர்.
டெல்லியில் குண்டு வைத்து விட்டு அப்படியே சென்னை வந்து அங்கிருந்து இலங்கைக்கு தப்பி, அதன் பிறகு அங்கிருந்துபாகிஸ்தானுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கு இலங்கையைச் சேர்ந்த தாவூத்கான் என்பவர் உதவி செய்வதாகஉறுதியளித்திருந்தார்.
இந்தத் திட்டத்தை தீட்டுவதற்கு முன்பே சென்னைக்கு வந்திருந்த இருவரும் சென்னை பெரியமேட்டில் உள்ள புஹாரிஹோட்டலில் தங்கி சதித் திட்டம் குறித்து விவாதித்துள்ளனர். நவம்பர் 24ம் தேதி முதல் 26ம் தேதி சென்னையில் தங்கியுள்ளனர்.அதன் பிறகு காஷ்மீர் சென்று மீண்டும் குண்டு வைக்க டெல்லி வரும்போது மாட்டிக் கொண்டனர்.
டெல்லியைப் போலவே சென்னையிலும் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களை நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.மேலும் பெங்களூரில் உள்ள இம்ரான் என்பவர் மூலம் அங்கும் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக போலீசாரிடம் சிக்கிவிட்டனர். இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான்இம்ரானையும் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இரு தீவிரவாதிகளையும் சென்னைக்கு சனிக்கிழமை அழைத்து வந்த டெல்லி போலீஸார், புஹாரிஹோட்டலுக்குச் சென்று விசாரணை நடத்தினார். இதேபோல பெரியமேடு போலீஸாரும் புஹாரி ஹோட்டலில் விசாரணைநடத்தினர்.
இரு தீவிரவாதிகளும் சொன்ன இலங்கை நபரான தாவூத் கானும் பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெற்றவர். அவர் தங்களைசந்திக்க சென்னைக்கு வருவதாக கூறியிருந்தார். ஆனால் வரவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என இருதீவிரவாதிகளும் போலீஸில் தெரிவித்துள்ளனர்.
எனவே தாவூத் கான் சென்னையில் பதுங்கியிருக்கிறாரா என்பது குறித்து தீவிர விசாரணையும், தேடுதல் வேட்டையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னை நகரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications