ஐ.நா பாதுகாப்பு சபையில் 5 புதிய நாடுகள்
ஐ.நா:ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பினர்களாக 5 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஐ.நாவின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனாஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. எந்தத் தீர்மானத்தையும் ரத்து செய்யும் வீடோ அதிகாரம்கொண்டவை இந்த நாடுகள்.
![]() |
அதே நேரத்தில் பாதுகாப்பு சபையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 நாடுகள் சுற்று முறைப்படிதாற்காலிக நியமனம் பெறும். அந்த வகையில் இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா, பனாமா, இத்தாலி,பெல்ஜியம் ஆகியவை தாற்காலிக உறுப்பு நாடுகளாக நியமிக்கப்பட்டுள்ளன. இவை 2 ஆண்டுகள் இந்தஅந்தஸ்தில் இருக்கும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்டது ஐ.நா. பாதுகாப்பு சபை. இதனால் அந்த காலத்தில்பலமிக்க நாடுகளாக இருந்த 5 நாடுகளும் நிரந்தர உறுப்பினர்களாகிவிட்டன.
இப்போது உலகில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டபோதும் இந்த 5 நாடுகளே நிரந்தர உறுப்பினர்களாகஅமர்ந்து கொண்டுள்ளன. இதனால் இந்த அவையை விரிவாக்க வேண்டும், அதில் தங்களுக்கும் நிரந்தர இடம்தர வேண்டும் என இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகள் கோரிவருகின்றன.
ஆனால், இந்தக் கோரிக்கையை அமெரிக்காவும் சீனாவும் காதில் வாங்காமல் உள்ளன. பாதுகாப்பு அவையில்நிரந்தர உறுப்பினராக இந்தியாவும் ஜப்பானும் வருவதை சீனா விரும்பவில்லை. அமெரிக்காவோ யாரும்வருவதை விரும்பவில்லை.
சோவியத் யூனியன் சிதைந்துவிட்ட நிலையில் ரஷ்யா பலமிழந்துவிட்டதால் இப்போது அமெரிக்கா வைத்ததேஐ.நாவில் சட்டம் என்றாகிவிட்டது.
ஐ.நாவில் 192 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications