பவானி: டேங்கர் லாரி மோதி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:பவானியில் பெட்ரோல் டேங்கர் லாரி மோதி 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் பாவனியை சேர்ந்த மாரியப்பன் (52), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சகுந்தலா (35),காஞ்சிக்கோயில் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (38) ஆகியோர் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து விட்டுபவானி செல்வதற்காக பேருந்து நிலைத்திற்கு வந்தனர்.
அப்போது மேட்டூரில் இருந்து கோவை நோக்கி வந்த டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகஓடி பேருந்து நிறுத்ததில் நின்று இருந்த மாரியப்பன், சகுந்தலா, கோவிந்தம்மாள் ஆகிய 3 பேர் மீதும் மோதி,அருகில் இருந்த பள்ளி சுவரில் மோதி நின்றது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications