சிலைகளோடு மோத வேண்டாம்: பாஜக
சென்னை:சிலைகளோடு மோத வேண்டாம், சித்தாந்தத்துடன் மோதுவோம் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர்இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1973ம் ஆண்டு முதல் முயற்சி செய்து, எதிர்ப்பின் காரணமாக தள்ளிப் போடப்பட்ட பெரியாரின் சிலை நிறுவும்நிகழ்ச்சி ஸ்ரீரங்கத்தில் அரசு அனுமதியுடன் நிறுவப்பட்டது. இந்த செயலுக்கு எதிர்விளைவாக சிலர் பெரியாரின்சிலையை சேதப்படுத்தினர்.
அதன் எதிர்விளைவாக சில இந்து வழிபடுதலங்களும், பக்தர்களும் தாக்கப்பட்டனர். பெரியார் சிலை வைப்பதில்எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் அது இந்துக்கள் வழிபடுதலத்துக்கு எதிரே வைப்பது முறையற்றது.
ஏற்கனவே அப்படி வைக்கப்பட்ட சிலைகளை நீதிமன்றத்தின் மூலமாகவோ அல்லது ஜனநாயக முறைப்படிமக்கள் ஆதரவுடனோ முறைப்படி அகற்றப்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். இதற்கு வன்முறைதீர்வாகாது.
மீண்டும் கோவையில் பெரியார் சிலையை சிலர் அவமானப்படுத்தினர். அதன் எதிர் விளைவாக மைலாப்பூரிலும்,திருவல்லிக்கேணியிலும் இந்து வழிபடுதலங்கள் தாக்கப்பட்டுள்ளன. இது கண்டனத்துக்குரியது.
மேலும் பெரியார் சிலைகள் பல வைக்கப்போவதாக திராவிட கழகம் அறிவித்துள்ளது. அதில் நமக்கு எந்தஎதிர்ப்பும் இல்லை. ஆனால் சிலைகளை ஆலயத்துக்கு முன்பு வைப்பதை திராவிட கழகம் தவிர்க்க வேண்டும்.சிலைகளின் கீழ் எழுதப்படும் வாசகங்களும் எவரையும் புண்படுத்தவதாக இருக்க கூடாது.
சிலைகளுடன் மோதுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாறாக சித்தாந்தத்துடன் சித்தாந்தம்மோதுவது ஆரோக்கியமான ஒரு விவாதத்தை உருவாக்கும். அந்த விவாத்ததின் தீர்ப்பை மக்கள்தீர்மானிக்கட்டும் என்று கூறியுள்ளார் கணேசன்.












Click it and Unblock the Notifications