பஸ் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்-கருணாநிதி
சென்னை:தமிழக அரசு பஸ் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன்போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டு தோறும்வழங்கப்படும் செயல்திறன் ஊக்கத் தொகை, கடந்த ஐந்து ஆண்டுகளாக நிறுத்தபட்டிருந்ததை, மீண்டும் இந்ததமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் முதல் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அதன்படி 2006ம் ஆண்டில் 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு ரூ. 85 வீதமும்,151 முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு ரூ. 195 வீதமும், 200 நாட்களுக்கு மேல்பணிபுரிந்த பணியாளர்களுக்கு ரூ. 625 வீதமும் செயலாக்க ஊக்கத் தொகையாக 1,10,264 பணியாளர்களுக்குமொத்தம் ஏறத்தாழ ரூ. 7 கோடி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications