கிரெடிட் கார்ட் விற்க போய்.. பலாத்காரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை தனக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என இளம்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Sindujaமணலி மாத்தூர் அரசு குடியிருப்பில் வசித்து வரும் சிந்துஜா (19). தனியார் வங்கியில் வேலை செய்கிறார்.இந்நிலையில் சிந்துஜா போலீஸ் கமிஷனர் லத்திகாவிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது,

வங்கி வாடிக்கையாளர்களிடம் செல்போனில் பேசி அவர்களை கிரெடிட் கார்டை வாங்க வைப்பதுதான் என்வேலை. கடந்த ஒராண்டுக்கு முன் செல்போனில் பேசும்போது எஸ்ஆர்எம் பொறியில் கல்லூரி மாணவர் மகேஷ்என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் எங்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஒருநாள் மகேஷ் என் அலுவலகம் வந்து என் அம்மா,அப்பா ஆந்திராவில் இருந்து வந்துள்ளனர். உன்னை பார்க்க வேண்டும் என கூறினர்கள் என்று கூறி என்னைஅவர் தங்கியிருந்த அறைக்கு அழைத்து சென்றார்.

அங்கு சென்றதும் கதவை தாழ்ப்பாள் போட்டார். பின்னர் என் அம்மா, அப்பா வந்திருக்கிறார்கள் என்றுஉன்னிடம் பொய் சொன்னேன் என்றார். இதையடுத்து அவர் அறையில் இருந்த கம்ப்யூட்டரில் ஆபாச படத்தைஓடவிட்டார். நான் அதை நிறுத்துமாறு கூறினேன்.

அப்போது அவர் உன்னை கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறிகட்டாயப்படுத்தி என்னை பலாத்காரம் செய்தார். பின்னர் என் பெற்றோரிடம் மகேஷை காதலிப்பது குறித்துசொன்னேன். அவர்களும் மகேஷை அழைத்துப் பேசினர். அப்போது மகேஷ் என்னை திருமணம் செய்துகொள்வதாக எழுதி கொடுத்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நான்கைந்து ரவுடிகளுடன் என் வீட்டுக்கு வந்த மகேஷ், உன்னை திருமணம்செய்து கொள்ள முடியாது. போலீசுக்கு சென்றால் உன்னை தொலைத்து விடுவேன் என மிரட்டினார். என்னைஇப்போது மகேஷ் ஏமாற்ற பார்க்கிறார். எனவே அவரை எனக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறியிருந்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட லத்திகா சரண், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மணலி போலீஸாருக்குஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+