இமாம் அலி கடத்தல் வழக்கு: 37 பேருக்கு சிறை
மதுரை:இமாம் அலி, ஹைதர் அலி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 37 பேருக்கும் மதுரை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகியோர் கடந்த 2002ம் ஆண்டு வழக்குவிசாரணைக்காக சென்னை மத்திய சிறையிலிருந்து கோவில்பட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விசாரணை முடிந்து மீண்டும் சென்னைக்கு அழைத்து வரும் வழியில், மதுரை அருகே திருமங்கலத்தில் ஒருகும்பல் போலீஸாரைத் தாக்கிவிட்டு இமாம் அலியையும், ஹைதர் அலியையும் மீட்டுச் சென்றது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் 42 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.இவர்களில் இமாம் அலி உள்ளிட்ட 4 பேர் பெங்களூரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஹைதர் அலியை சிவகங்கையில் வைத்து போலீஸார் கைது செய்தனர். ஒருவர் இன்னும் தலைமறைவாகஉள்ளார். மற்ற 37 பேர் மீதும் மதுரை 3வது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மொத்தம் 185 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இவ்வழக்கில் இன்று நீதிபதி சாவித்ரிதீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட 37 பேரும் குற்றவாளிகள் என அவர் அறிவித்தார்.
இவர்களில் 31 பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையும், மற்ற 6 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும்விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications