அதிமுக பெரம்பலூர் மா.செ. திடீர் மாற்றம்
சென்னை:பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளர் ரவிச்சந்திரனை அதிரடியாக மாற்றியுள்ளார் அக் கட்சியின் பொதுச் செயலாளர்ஜெயலலிதா. புதிய மாவட்ட செயலாளராக முன்னாள் மா.செ. இளவரசன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் தோல்விக்குப் பின் தொடர்ந்து நிர்வாகிகளை மாற்றி வரும் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன் இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்குபதிலாக முன்னாள் மாவட்டச் செயலர் இளவரசன், பெரம்பலூர் மாவட்ட செயலராக நியமிக்கப்படுகிறார். கட்சியினர் அவருக்குஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதிமுகவில் திமுக கவுன்சிலர்கள்:
இதற்கிடையே அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலூர் மேற்கு மாவட்டம் அண்ணாமலை நகர் 1வது வார்டு திமுக செயலர் கிருஷ்ணமூர்த்தி, அண்ணாமலை நகர் பேரூராட்சி1வது வார்டு திமுக கவுன்சிலர் தங்கமணி, உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அண்ணாமலைநகர் பேரூராட்சி 15வது வார்டு கவுன்சிலர் ஆர்.ரமேஷ்,
7வது வார்டு கவுன்சிலர் செந்தில் குமார், 8வது வார்டு கவுன்சிலர் பேபி, 12வது வார்டு கவுன்சிலர் கலாவதி, சிதம்பரம் நகராட்சி8வது வார்டு கவுன்சிலர் ஜெயவேல், காட்டுமன்னார்கோயில் ஒன்றியம் 10வது வார்டு கவுன்சிலர் அந்தோணி ராஜதுரை,
திட்டக்குடி பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலர் அக்பர் மற்றும் 13வது வார்டு கவுன்சிலர் முத்துவேல் ஆகியோர் அதிமுகபொதுச் செயலர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்று தங்களை அதிமுக அடிப்படைஉறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications