இன்னொரு கல்யாணம்?-நோ சான்ஸ்: ஜெயலட்சுமி
மதுரை:பெண்களுக்காக தனி அமைப்பு தொடங்கி போராடப் போவதாக சிவகாசி ஜெயலட்சுமி கூறியுள்ளார்.
ஏட்டு முதல் எஸ்.பி. வரையிலான காவல்துறையினர் மீது பாலியல் புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்ஜெயலட்சுமி. அவரால் புகார் கூறப்பட்ட சில காவல்துறை அதிகாரிகள் பதவி இழந்தனர். அதேசமயம்ஜெயலட்சுமி மீதும் பல வழக்குகள் பாய்ந்தன.
![]() |
டி.எஸ்.பி. மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஜெயலட்சுமி 2வது குற்றவாளியாகசேர்க்கப்பட்டார். நகைக் கடை அதிபரிடம் சப் இன்ஸ்பெக்டர் உடையில் போய் நகை வாங்கி மோசடி செய்ததாகஇன்னொரு வழக்கும் போடப்பட்டது. மேலும் சில வழக்குகளிலும் ஜெயலட்சுமி சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து ஜெயலட்சுமி சமீபத்தில் திருச்சி சிறையிலிருந்துவிடுதலை ஆனார். நேற்று மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார்ஜெயலட்சுமி.
அப்போது அவர் கூறுகையில், 15 மாத சிறைவாசத்தின் போது பல வகையான கைதிகளை சந்திக்க நேர்ந்தது. பலபெண்கள் தங்களது கதையைச் சொல்லும்போது நான் மனசு தாங்காமல் அழுதுள்ளேன். அவர்கள் பட்டகஷ்டஙகளையெல்லாம் பார்க்கும்போது நாம தேவலையே என்று நினைத்திருக்கிறேன்.
இப்படிப்பட்ட பெண்களுக்கு நம்மால் உதவ முடியவில்லையை என்று ஆதங்கப்பட்டேன். அந்த ஏக்கம்என்னிடம் உள்ளது. இப்படிப்பட்ட கஷ்டப்படும் பெண்களுக்கு உதவ தனி அமைப்பு தொடங்கதிட்டமிட்டுள்ளேன்.
ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி அதன் மூலம் சிரமப்படும் பெண்களுக்கு உதவ முடிவு செய்துள்ளேன். இதுஎனது கனவு. எப்படியும் நிறைவேற்றுவேன்.
எனது வாழ்க்கையில் நான் பல பிரச்சினைகளை சந்தித்து விட்டேன். பட்டது போதும். இனியும் என்னால் தாங்கமுடியாது. இன்னொரு கல்யாணத்தைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை. இனி கல்யாணம் என்ற பேச்சுக்கேஎனது வாழ்க்கையில் இடமில்லை என்றார் ஜெயலட்சுமி.













Click it and Unblock the Notifications