எஸ்.ஐக்கு அடி: நிருபர் கைது-எடிட்டர் ஓட்டம்
சென்னை:சென்னை எழும்பூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்து அவரைத் தாக்கிய வார இதழ்நிருபர் கைது செய்யப்பட்டார். அவருடன் வந்த அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் தப்பி ஓடி விட்டார்.
கிரைம் நியூஸ் என்ற வார இதழின் ஆசிரியராக இருப்பவர் மகேஸ்வரன். இந்த இதழின் நிருபர் பாலாஜி.இவர்கள் இருவரும் எழும்பூர் காவல் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் சண்முகத்துடன்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் கோபமடைந்து சப் இன்ஸ்பெக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்துகாவலர்கள் விரைந்து வந்து சப் இன்ஸ்பெக்டரை அவர்களிடமிருந்து மீட்டனர்.
பின்னர் இரு பத்திரிக்கையாளர்களையும் அவர்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் மகேஸ்வரன் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து பாலாஜியைப் பிடித்த போலீஸார் அவரைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தப்பி ஓடி விட்ட மகேஸ்வரனை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications