மதிமுக என்றால் மறுபடியும் திமுக: கருணாநிதி
சென்னை:புதுக்கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் திராவிட என்ற பெயரை ஒட்டிக் கொண்டால்தான் வளர முடியுமென்ற அளவிற்கு திராவிடம் அசைக்க முடியாத சக்தியாகிவிட்டதுஎன முதல்வர் கருணாநிதி கூறினார்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதிமுகவினர் நூற்றுக்கணக்கில் கருணாநிதிமுன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்தநிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,
திமுகவுக்கு வந்திருக்கிறீர்கள். இப்போது தான் மதிமுக என்ற பெயர் உங்களுக்கு ஒருவகையிலே பொருந்துகிறது. அதாவது மறுபடியும் திமுக என்று திமுகஆகியிருக்கிறீர்கள்.
மதிமுகவில் இருந்து திமுகவுற்கு எப்படி வந்தாலும், தழுவப் போகிற கை என்னுடையகை என்பதால் நீங்கள் எப்படியும் வாருங்கள். மதிமுக கணேசன் தலைமையிலும்,ராமச்சந்திரன் தலைமையிலும் தனியாக இயங்கினால் எதிர்காலத்தில் திமுகதோழமைக்கட்சிகளில் ஒன்றாக அது விளங்கும், அவர்கள் விரும்பினால்.
அப்படிப்பட்ட சூழ்நிலை அமையாத பட்சத்தில் யார், யார் நேரடியாக வந்து கட்சியில்தங்களை ஒப்படைத்துக் கொள்ள வேண்டுமேன்று விரும்புகிறார்களோ அவர்கள்வந்து சேர்ந்தால் திமுகவில் பழைய உறுப்பினராகவே கருதிக் கொள்ளலாம்.
பொதுவாக ஒரு காலத்தில் திராவிடர் என்றாலே, திராவிடம் என்றாலே அதைவெறுத்துப் பயந்த ஒரு நிலை இருந்தது. ஆனால், இன்று அந்த நிலைமாறியிருக்கின்றது. இன்றைக்கு புதுக்கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் திராவிட என்றபெயரை ஒட்டிக் கொண்டால் தான் வளர முடியுமென்ற அளவிற்கு திராவிட என்றபெயரை ஒட்டிக் கொண்டு கட்சிக்கு பெயரை வைத்துக் கொள்கிறார்கள் என்பதைநீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
யார் யார் அப்படி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் சொல்லி அந்தக் கட்சிப்பெயரை விளம்பரப்படுத்த விரும்பவில்லை என்று விஜய்காந்தை வாரிவிட்டுநிறுத்தினார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications