கடத்தல் நாடகம் ஆடிய ரயில்வே அதிகாரி மகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:கடத்தப்பட்டதாக கூறி நாடகமாடி, போலீஸாரை அலைக்கழித்த தாம்பரம் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரின் மகனைபோலீஸார் கைது செய்தனர்.

கிழக்கு தாம்பரம் சதானந்த பாரதி தெருவில் வசித்து வருபவர் கமல்நாத் சிங். இவரது மகன் திலீப் நாத் சிங் (வயது 18). இவர்சைதாப்பேட்டையில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் படித்து வருகிறார்.

நேற்று மாலை அவர் வழக்கமான நேரத்தில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவனது குடும்பத்தினர் பதட்டமடைந்தனர்.இந்த நிலையில் இரவில் கமல்நாத் சிங் வீட்டுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் உங்களது மகனைக் கடத்திவைத்துள்ளோம். ரூ. 5 லட்சம் கொடுத்தால் மீட்டுச் செல்லலாம் என தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தார் கமல்நாத் சிங். இதேபோலத்தான் வடபழனியில் சிறுவன் அரவிந்த் கடத்தப்பட்டுக்கொலை செய்யப்பட்டான் என்பதால் போலீஸார் படு துரிதமாக நடவடிக்கையில் இறங்கினர்.

தனிப்படைகள் அமைக்கப்பட்டு திலீப்பைத் தேடும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. மாநகர காவல்துறை ஆணையர் லத்திகாசரணே இதில் நேரடி தலையிட்டு திலீப்பைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார்.

திலீப்பின் நண்பர்களின் முகவ>கள் சேகரிக்கப்பட்டு அவர்களது வீடுகளுக்கு போலீஸார் சென்று விசாரணை நடத்தினர்.கடைசியாக தேனாம்பேட்டையில் உள்ள அவரது நண்பர் கணேசன் இருப்பிடத்திற்குப் போலீஸார் சென்றபோது அவர்களுக்குஅதிர்ச்சி காத்திருந்ததது.

அங்கு கணேசனும், திலீப்பும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தனர். இரவெல்லாம் அலைந்து திரிந்து தேடி வந்த போலீஸார்கடுப்பாகி திலீப்பைப் பிடித்து சேலையூர் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர். அங்கு வைத்து அவனிடம் விசாரணைநடத்தியபோது, தேர்வில் தோல்வி அடைந்ததால் என்னை பெற்றோர் திட்டினர். அவர்களை பயமுறுத்தத்தான் கடத்தல் நாடகம்ஆடியதாகவும், போனில் வேறு குரலில் பேசி மிரட்டியது நான் தான் என்றும் திலீப் கூறினான்.

இதையடுத்து போலீஸார் திலீப்பைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+