எல்.ஜி, செஞ்சி நிரந்தரமாக நீக்கம்-மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
சென்னை:அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து எல்.கணேசனையும், துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து செஞ்சி ராமச்சந்திரனையும் நிரந்தரமாக நீக்கி வைகோதலைமையில் நடந்த மதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
மதிமுக பொதுக்குழு மிகுந்த பரபரப்புக்கிடையே இன்று காலை 10.30 மணிக்குஅண்ணா நகரில் உள்ள விஜயஸ்ரீ மஹால் கல்யாண மண்டபத்தில் தொடங்கியது.பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் எம்.பிக்கள் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், பொள்ளாச்சி கிருஷ்ணன்,எம்.எல்.ஏக்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எல்.ஜி. விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்துவிவாதிக்கப்பட்டு வருகிறது. பல முக்கியத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரை நிரந்தரமாக கட்சி பொறுப்பிலிருந்துநீக்கும் முடிவுக்கு பொதுக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
மேலும் அவர்களை கட்சியில் இருந்து நீக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவுடன் உள்ள தோழமையும், நேசமும் வலுப்படும் வகையல் தீவிரமாகசெயல்படுவது என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் விரோத,சிறுபான்மை திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியைத் திரட்டுவது எனவும் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
மேலும் அண்ணாவின் கனவுகளை நனவாக்கவும், தாய்த் தமிழகத்தின் உயர்வுக்குப்பாடுபடவும் உறுதி பூண்டு மதிமுக மாநில சுயாட்சி மலரவும், அன்னைத் தமிழ்மொழியை இந்திய ஆட்சி மொழியாக ஏற்றம் பெறவும், சமூக நீதியைக் காத்திட, இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்யும் உரிமையை மாநில அரசுளும் வழங்கிடும் அரசியல்சட்டத் திருத்தத்தை நிறைவேற்றவும்,
தமிழ் ஈழ மக்களின் உரிமை விடுதலைப் போருக்குத் தோள் கொடுக்கவும், முல்லைபெரியாறு, காவிரி ஆறு உள்ளிட்ட பிரச்சனைகளின் தமிழக மக்களின் உரிமை நலன்காக்க அர்ப்பணித்துப் பாடுபடவும், அதிமுகவோடு கொண்டுள்ள தோழமையும்நேசமும் நாளும் வளர்ந்திடும் விதத்தில் செயல்படவும், திமுக அரசை வீழ்த்திடமக்கள் சக்தியைத் திரட்டவும் சூளுரை மேற்கொள்வதெனவும் தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
வைகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அவைத் தலைவர் எல்.கணேசன்,துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் சேலத்தில் போட்டிமதிமுக பொதுக் குழுவைக் கூட்டி வைகோவை கட்சியை விட்டு நீக்கியதுகுறிப்பிடத்தக்கது.
மதிமுக பொதுக் குழுவில் 1,530 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் கட்சி விரோதநடவடிக்கையால் நீக்கப்பட்டவர்கள் போக மொத்தம் 1,406 பேர் உள்ளனர்.அவர்களில் 1,300க்கும் மேற்பட்டோர் தங்கள் பக்கம் உள்ளதாக வைகோ தரப்புகூறுகிறது.
புதிய அவைத் தலைவராக பொருளாளர் கண்ணப்பன் தேர்ந்தெடுக்கப்படலாம்.வைகோவின் வலதுகரமான மதிமுகவின் கொள்கை விளக்க அணியின் செயலாளர்நாஞ்சில் சம்பத்துக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு கிடைக்கும் எனத்தெரிகிறது.
பொதுக் குழுக் கூட்டத்தை சீர்குலைக்க எல்.கணேசன் தரப்பும், திமுகவும் முயல்வதாகவைகோ குற்றம் சாட்டியுள்ள நிலையில் பெரும் பரபரப்புக்கு இடையே இன்றையமதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்க நேற்று மாலை முதலே மதிமுக பொதுக் குழு உறுப்பினர்களும்,நிர்வாகிகளும் கட்சியின் தலைமையகத்திலும் கல்யாண மண்டபத்திலும்கூடிவிட்டனர்.
நேற்று இரவு முழுவதும் மதிமுக தொண்டரணியினர் கல்யாண மண்டபத்தில்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை முன்னதாகவே கல்யாணமண்டபத்துக்கு வந்துவிட்ட வைகோ ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
பொதுக் குழு உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் மண்டபத்துக்குள் விட வேண்டாம்என தொண்டரணியினருக்கு உத்தரவிட்டார். மண்டபத்தில் வெளியிலும் ஏராளமானதொண்டர்கள் குவிந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications