பண மோசடி: நடிகர் பாண்டியன் கைது
சென்னை:ரூ. 2.25 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டதாககொடுக்கப்பட்ட புகாரின் பே>ல் நடிகர் பாண்டியனை போலீஸார் இன்று கைதுசெய்தனர்.
![]() |
பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் பாண்டியன் முன்பு திமுகவில்தீவிரமாக செயல்பட்டவர். சில காலத்திற்கு முன்பு அவர் அதிமுகவில் இணைந்தார்.தேர்தல் பிரசாரங்களின்போது மட்டும் அதிமுக மேடைகளில் பாண்டியன்தென்படுவது வழக்கம்.
இந்த நிலையில் பாண்டியன் மீது மானாமதுரையைச் சேர்ந்த முருகேசன் என்பவர்போலீஸில் புகார் கொடுத்தார். தற்போது திருவொற்றியூரில் வசித்து வரும்முருகேசனிடம், கடந்த 1999ம் ஆண்டு பாலிடெக்னிக்கில் கிளர்க் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 2.25 லட்சம் பணத்தை பாண்டியன் வாங்கினாராம்.
ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. இதையடுத்து பாண்டியனிடம் பணத்தைத்திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூ. 80 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளார். மீதப்பணத்தைத் திருப்பிக் கேட்டு அவ்வப்போது பாண்டியனை சந்திப்பாராம் முருகேசன்.
ஆனால் நாளை வா, நாளை வா என்று கூறியே பாண்டியன் காலம் கழித்து வந்ததாகதெரிகிறது. இந் நிலையில் மீதப் பணத்தை வாங்க பாண்டியன் வீட்டுக்கு இன்று காலைவந்துள்ளார் முருகேசன்.
அப்போது அவருக்கும், பாண்டியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில்ஆத்திரமடைந்த பாண்டியன், முருகேசனை அடித்து உதைத்துள்ளார். இதுதொடர்பாகமுருகேசன் விருகம்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் பேரில் பாண்டியனை போலீஸார் இன்று கைது செய்தனர்.













Click it and Unblock the Notifications