தமிழ் நூல்கள் படிக்கும் ஆர்வம் வரணும்-ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழ் நூல்களைப் படிக்கும் ஆர்வத்தை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ் மண் பதிப்பகம் தமிழறிஞர் திரு.வி.க.வின் 54 நூல்களை 24 தொகுதிகளாகதொகுத்து வெளியிட்டுள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், பாமக நிறுவனர்ராமதாஸ் நூல்களை வெளியிட்டு பேசினார்.

ராமதாஸ் பேசுகையில், தமிழ் நூல்களையும், தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பானபணிகளிலும் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

தமிழ் மொழி மீதான பற்றும், காதலும் தமிழர்களுக்கு இயற்கையிலேயேஅமைந்துள்ளது. அதை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பயன்படுத்த முனையவேண்டும்.

அரசியல் அறிவியல் படிக்கும் மாணவர்கள் திரு.வி.க.வின் நூல்களைப் படிக்கவேண்டும். சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பும், சுதந்திரம் பெற்ற பின்னும் இருந்தஅரசியல் நிகழ்வுகளை தனது நூலில் அழகாக குறிப்பிட்டிருக்கிறார் திரு.வி.க.

திரு.வி.க., தந்தை பெரியார், காங்கிரஸ் தலைவர் வரதராஜுலு நாயுடு ஆகியோருக்குஇடையே அரசியலில் பல கருத்து வேறுபாடுகள் நிலவிய போதிலும், அதையும்தாண்டிய ஆழமான நட்பைக் கொண்டிருந்தனர் என்றார் ராமதாஸ்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பேசுகையில்,திருவிகவின் நூல்கள் தமிழ் சமுதாயத்திற்குக் கிடைத்த வரப் பிரசாதம். திருவிக ஒருபன்முகத் திறமை கொண்ட மனிதர். தமிழாசிரியராக, சிறந்த பத்திரிக்கையாளராகவிளங்கியவர் அவர் என்றார் நல்லகண்ணு.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசுகையில், அரசியலில்லட்சியத்துடன் கூடி தலைவராக விளங்கியவர் திருவிக. முரண்பாடில்லாதபார்வையுடன் கூடிய சிறந்த சீர்திருத்தவாதியாகவும் விளங்கியவர்.

இன்றைய அரசியல் சூழ்நிலைகளை ஆராய விரும்பும் மாணவர்களுக்கு திருவிகவின்நூல்கள் பேருதவியாக இருக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+