நதிகள் இணைப்பு-19ம் தேதி திமுக போராட்டம்
திருச்சி:தென்னிந்திய நதிகளை இணைத்து தேசியமயமாக்கக் கோரி திமுக விவசாய அணிசார்பில் ஜனவரி 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
திமுக விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம் திருச்சியில் செய்தியாளர்களிடம்பேசுகையில், திமுக விவசாய அணியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாககிள் கூட்டம்நடந்தது. இக்கூட்டத்தில் தென்னிந்திய நதிகளை இணைத்து தேசியமயமாகக்வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோ>க்கை விடுக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 19ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாய அமைப்புகளையும்பங்கேற்கச் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
கேரள அரசு முல்லைப் பெ>யாறு அணை விவகாரம் தொடர்பாக தவறானதகவல்களைத் தொடர்ந்து பரப்பி வருகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று சுமூகத்தீர்வு காண கேரளா முயல வேண்டும் என்று கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுஎன்றார் ராமலிங்கம்.












Click it and Unblock the Notifications