தூக்குக்கு முன் உடலை டிரிம் ஆக்கிய சதாம்

Subscribe to Oneindia Tamil

அம்மான்:தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு கடுமையாக உடற்பயிற்சி செய்து தனதுஉடல் எடையைக் குறைத்து படு சுறு சுறுப்பாக இருந்தார் சதாம் உசேன் என அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

டிசம்பர் 28ம் தேதி அமெரிக்க படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சதாமை ஜோர்டானைச் சேர்ந்த வதூத்பாவ்சி ஷாம்ஸ் தீன் என்ற வழக்கறிஞர் சந்தித்தார். அப்போது தன்னிடம் சதாம் பேசியது குறித்து அம்மான்நகரில் அளித்த பேட்டியில் விவரித்துள்ளார் தீன்.

Saddam

நான் சதாமை சந்தித்தபோது கடந்த இரண்டு நாட்களாக நான் தினசரி 35 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்துவருகிறேன். எனது உடலை புத்துணர்ச்சியுடனும், திடகாத்திரமாகவும் வைத்துக் கொள்ளவே இவ்வாறுசெய்கிறேன்.

அராபியர்கள் சாகும்போது கூட மன திடத்துடன், கெளரவமாக மரணமடைய விரும்புவார்கள், கொள்கைகளைவிட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதை அவர்கள் (அமெரிக்கர்கள்) புரிந்து கொள்ளட்டும். அதனால்தான்கூடுதல் நேரம் உடற் பயிற்சி செய்து என்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறேன்.

நான் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு அரேபியர்களால் மதிக்கப்படுவேன். அரேபியர்களின் அடையாளமாககருதப்படுவேன் என்றார் சதாம்.

நான் சதாமை சந்தித்தபோது கியூபா நாட்டு சிகாரை பிடித்தபடி, வழக்கமாக அணியும் கருப்பு நிற கோட்டுடன்கம்பீரமாக காணப்பட்டார் சதாம்.

தூக்குத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டபோது தூங்குவதற்காக தூக்க ஊசி போடட்டுமா என்று அமெரிக்கடாக்டர்கள் சதாமிடம் கேட்டபோது, அது எனக்குத் தேவையில்லை. அது இல்லாமலேயே தூங்கக் கூடியசக்தியையும், நம்பிக்கையையும் கடவுள் எனக்குக் கொடுத்துள்ளார் என்றாராம் சதாம்.

தன்னிடம் இருந்த சிகார்களில் சிலவற்றை பார்க்க வந்த எங்களுக்கும், பாதுகாப்புக்காக நின்றிருந்த அமெரிக்கவீரருக்கும் கொடுத்த சதாம், சுத்தமான இதயத்துடனும், தூய்மையான கரங்களுடனும் என்னை உருவாக்கியகடவுளை நான் சந்திப்பேன்.

2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் நான் டைக்ரீஸ் ஆற்றை சிறிய படகு மூலமும், நீச்சலடித்தும் கடந்தேன். அதன்பிறகு சில நாட்களில் என்னை சிறை பிடித்து விட்டார்கள்.

அமெரிக்க படையினரின் சிறைவாசத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது எனது எழுத்துக்கள்தான். நிறையகவிதைகளை எழுதியுள்ளேன். அத்தனையும் எனக்கு நல்ல மனோதிடத்தைக் கொடுத்தன.

உலகைப் பார்க்கும் ஜன்னலாக கவிதை எனக்கு உதவியது. ரமலான் மாதத்தின்போது தினசரி எட்டுமுறை குரான்படிப்பேன். நீண்ட சிறை வாசம் எங்களை முடக்கிப் போட்டு விடவில், முறிந்து போக விடவில்லை என்றாராம்சதாம்.

சிறையில் இருந்தபோது அரபு கவிஞரான அல் முத்தனாபியின் கவிதைகளைத்தான் அதிகம் படித்தாராம் சதாம்.அதுதவிர ஐ.நா. மனித உரிமை பிரகடனத்தையும் விரிவாகப் படித்துள்ளார்.

தொடர்ந்து சதாம் கூறுகையில், என்னை சிறை பிடித்த பின்னர் ஒரு அமெரிக்க அதிகாரி என்னிடம் விசாரணைநடத்தினார். அப்போது நான் கூறினேன், அமெரிக்காவை வெறுக்கும் அத்தனை பேருக்கும் காந்த சக்தியாக ஈராக்விளங்கும்.

அமெரிக்காவை ஈராக்கிலேயே நாங்கள் எதிர்கொண்டு போர் புரிவோம். எங்களது சொந்த வழியில், எங்களதுகொள்கைப்படி நாங்கள் போரிடுவோம். எனவே இப்போதே நீங்கள் ஈராக்கை விட்டு வெளியேறி விடுவதுநல்லது. வியட்நாமை விட மிகப் பெரிய தோல்வியை அமெரிக்கா சந்திக்கப் போகிறது.

2007ம் ஆண்டு தொடகத்தில் மிகப் பெரும் அவமானத்துடன் அமெரிக்கப் படைகள் ஈராக்கை விட்டுவெளியேறும். அமெரிக்க ஆக்கிரமப்பை எதிர்த்துப் போராடும் எனது மக்களுக்கு சதாமின் தேவை முதலில்தேவைப்பட்டது. ஆனால் இப்போது அவர்களுக்கு சதாம் தேவையில்லை. கடவுளின் அருளாலும், அவர்கொடுக்கும் பலத்தாலும் அமெரிக்கர்களை அவர்கள் விரட்டி அடிப்பார்கள்.

அமெரிக்கர்களை ஈராக்கியர்கள் விரட்டியடிக்கும் நேரம் நெருங்கி வரும் வேளையில் நான் விடைபெறுகிறேன்.அதற்காக நான் வருத்தப்படவில்லை, கவலைப்படவில்லை என்று கூறியுள்ளார் சதாம்.

சதாம் சொத்தைத் திருப்பித் தரும் பிரான்ஸ்:

இதற்கிடையே பிரான்ஸில் சதாமின் ஒன்று விட்ட சகோதரருக்குச் சொந்தமான சொகுசு பங்களாவை சதாம்குடும்பத்தினரிடம் திருப்பி வழங்க பிரான்ஸ் ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரெஞ்சு பத்திரிக்கையான லி பிகரோ வெளியிட்டுள்ள செய்தி: கேன்ஸ் நகருக்கு அருகே சதாமின்ஒன்று விட்ட சகோதரரான பர்ஸான் அல் திக்ரிதியின் (இவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது)ஆடம்பர பங்களா உள்ளது.

இந்த பங்களாவில் இரண்டு நீச்சல் குளங்களும் உள்ளன. 1980களில் ஈராக்குக்கான ஐ.நா. தூதராக இருந்தபோதுஇந்த பங்களாவை வாங்கினார் திக்ரிதி. ஜெனீவாவுக்கு வரும்போதெல்லாம் இந்த மாளிகையில்தான் தங்கிஓய்வெடுப்பார்.

2003ம் ஆண்டு ஈராக் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தபோது சதாம் உசேன், அவரது குடும்பத்தினர்மற்றும் நெருக்கமானவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. அப்படி முடக்கப்பட்ட சொத்தில் ஒன்றுதான் இந்தகேன்ஸ் மாளிகை.

இப்போது இந்த பங்களாவை சதாமின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக ஈராக் அரசுடன் பிரான்ஸ் அரசு பேசி வருகிறது.

இதுகுறித்து பிரான்ஸ் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜீன் பாப்டிஸ்ட் மட்டி செய்தியாளர்களிடம்பேசுகையில், தற்போதுள்ள நிலையில் இந்த மாளிகையை சதாமின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க முடிவுசெய்துள்ளோம். தொடர்ந்து இதை முடக்கி வைத்திருக்க நாங்கள் விரும்பவில்லை.

பங்களாவை ஒப்படைக்கும் விஷயத்தில் சட்டப்பூர்வ பிரச்சினைகள் வராத அளவுக்கு எச்சரிக்கையுடன்இருப்போம். பங்களாவை திருப்பிக் கொடுப்பது தொடர்பான நடவடிக்கைகளை பிரெஞ்சு தூதரகம்தொடங்கியுள்ளது என்றார் மட்டி.

ஒரு வருடத்திற்கு முன்பு இந்த மாளிகையைப் பார்த்துக் கொண்டிருந்த லெபனான் நாட்டவர்அப்பொறுப்பிலிருந்து விலகி விட்டார். தற்போது இந்த மாளிகை அப்படியே கிடக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+