11 எம்பிக்கள் பதவி பறிப்பு செல்லும்-உச்சநீதிமன்றம்
டெல்லி:நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய 11 எம்.பிக்களை பதவி நீக்கம் செய்தது செல்லும் எனஉச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்று மக்களவை மற்றும் மாநிலங்களைவையில்கேள்விகள் கேட்க தொகுதி வாக்காளர்களிடம் லஞ்சம் வாங்கிய எம்.பிக்களின் செயலை ரகசிய வீடியோ படம்மூலம் அம்பலமாக்கி நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது.
இதையடுத்து 10 மக்களவை எம்.பிக்களையும் பதவியிலிருந்து நீக்கினார் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிஉத்தரவிட்டார். அதேபோல ராஜ்யசபா எம்.பிக்கள் 2 பேரின் பதவியும் பறிக்கப்பட்டது.
இதை எதிர்த்து 11 எம்.பிக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றஉச்சநீதிமன்றம் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு நோட்டீஸ்அனுப்பியது. ஆனால் அந்த நோட்டீஸை வாங்க சோம்நாத் சாட்டர்ஜி மறுத்து விட்டார்.
இருப்பினும் மத்திய அரசு இந்த வழக்கில் ஆஜராகி விளக்கம் அளித்தது. மிகுந்த பரபரப்பான இந்த வழக்கைதலைமை நீதிபதி ஓய்.கே. சபர்வால், நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன், சி.கே.தாக்கூர், டி.கே.ஜெயின், ரவீந்திரன்ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்தது. இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி ரவீந்திரனைத் தவிர மற்ற நான்கு நீதிபதிகளும், பதவி பறிப்பு செல்லும் என கருத்துத் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து பெரும்பான்மை கருத்து அடிப்படையில், 11 எம்.பிக்களின் பதவி பறிப்பு செல்லும் என அரசியல்சாசன பெஞ்ச் தீர்ப்பளித்தது.
நீதிபதிகளின் தீர்ப்பில், தவறு செய்யும் எம்.பிக்களை அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. எம்.பிக்களைபதவி நீக்கம் செய்த நாடாளுமன்றத்தின் நடவடிக்கை சரியானதே.
நாடாளுமன்றத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் கூற முடியாது.இதன் மூலம் தங்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாக அவர்கள் கூறுவதையும் ஏற்க முடியாது என்றுகூறப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications