பிளஸ் டூ படித்தவர்களுக்கும் அரசுப் பணி!

Subscribe to Oneindia Tamil

நெல்லை:பிளஸ் டூ, பட்டபடிப்பு படித்தவர்களையும் அரசு அலுவலகங்களில் இளநிலை உதவியாளர் பணியிடங்களில்நியமிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.

நெல்லை வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் அங்கன்வாடி சத்துணவு மையங்களில் 30,000 காலி பணியிடங்கள் இருந்தன. அவற்றில் 10,000காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 20,000 பணியிடங்கல் அடுத்த 3 மாதங்களில் நிரப்பப்படும்.

நாடு முழுவதும் அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டிடம் கட்ட நபார்டு வங்கி ரூ. 10,000 கோடி ஒதுக்கியுள்ளது.இதில் ரூ. 450 கோடியை தமிழகத்திற்கு கேட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் 45,000 அங்கன்வாடி சத்துணவுமையங்கள் உள்ளன. இதில் 80,000 முதல் ஒரு லட்சம் வரையிலான ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

அங்கன்வாடி மையங்களில் நெல்லை, திருவாரூர், சென்னை மாவட்டங்களில் எரிவாயு பயன்படுத்தப்படஉள்ளது. ஒரு மாவட்டத்துக்கு 1000 மையங்கள் இதன் மூலம் பயன்பெறும், இது தவிர 214 மினி மையங்களும்அமைக்கப்பட உள்ளன. இதில் குழந்தைகளுக்கு சத்து மாவு மட்டும் வழங்கப்படும்.

பிளஸ் டூ, பட்டப்படிப்பு முடித்தவர்களையும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்பணியிடங்களில் நியமிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+