சிறப்பு ரயில்கள்-டிக்கெட் சுருட்டிய புரோக்கர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து நாகர்கோவில் மற்றும் கோவைக்கு இயக்கப்படவுள்ளசிறப்பு ரயில்களின் முன்பதிவு டிக்கெட்டுகள் அரை மணி நேரத்தில் விற்றுப் போனதால் பயணிகள் பெரும்அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை வருவதையொட்டி வழக்கமாக சென்னையிலிருந்து நாகர்கோவில் மார்க்கமாக செல்லும்அனைத்து ரயில்களிலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

தமிழகத்திலேயே அதிக அளவு ரயில் பயணிகள் செல்லும் மார்க்கம் இதுதான். இதைத் தொடர்ந்துசென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு 14 ரயில்களும், கோவைக்கு 2 சிறப்பு ரயில்களும் இயக்க ரயில்வே முடிவுசெய்தது.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஆனால் அரை மணி நேரத்திலேயேநாகர்கோவில் மார்க்கத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கும், ஒரு மணி நேரத்தில் கோவை மார்க்கத்தில்இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கும் டிக்கெட்டுக்கள் விற்றுத் தீர்ந்தன.

இதனால் டிக்கெட் எடுக்கக் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகளும் பெரும் அதிருப்தி அடைந்தன. வழக்கம்போல டிராவல் ஏஜென்சிகளும் புரோக்கர்கள் தான் டிக்கெட்டுக்களை அள்ளிக் கொண்டு சென்றனர். இதனால்பாதிக்கப்பட்டது அப்பாவிப் பயணிகள்தான்.

புரோக்கர்கள் இப்படி டிக்கெட்டுக்களை அள்ளிச் சென்றால் எங்களைப் போன்றவர்கள் எப்படி டிக்கெட் எடுக்கமுடியும். இந்தத் தொலைக்கு ஒரு முடிவே இல்லையா என்று பயணிகள் புலம்பியபடி திரும்பிச் சென்றனர்.

இன்னும் சில சிறப்பு ரயில்களை விட வேண்டும் அல்லது வழக்கமான ரயில்களில் கூடுதல் பெட்டிகளைஇணைக்க வேண்டும் என டிக்கெட் கிடைக்காத பயணிகள் ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை-நாகர்கோவில் இடையே இன்று முதல் 17ம் தேதி வரை இந்த சிறப்புகள் ரயில் இயக்கப்படுகின்றன.

கோவைக்கு நாளை முதல் (11ம் தேதி) 16ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+