சிறுமிகள் மாமிசத்தை தின்று வாந்தி எடுத்த சுரேந்தர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ:நொய்டா கொடூரக் கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளி சுரேந்திர் கோலி, சிறார்களைக் கொலை செய்தபின்னர் அவர்களது உடலை துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்டுள்ளான். அப்போது மாமிசத்தை சாப்பிடமுடியாமல் வாந்தி எடுத்தேன் என்று தெரிவித்ததாக உ.பி. மாநில டிஜிபி புவா சிங் கூறியுள்ளார்.

Monindersinghநொய்டா அருகே மொஹீந்தர் சிங் என்பவருக்குச் சொந்தமான பங்களாவில் சமீபத்தில் குவியல் குவியலாகஎலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பங்களா வளாகத்திலும், அருகே உள்ள சாக்கடையிலும் குவியல்குவியலாக எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு நாட்டையே உலுக்கியது.

இதைத் தொடர்ந்து வீட்டுக் காவலாளி சுரேந்தர் கோலி, மொஹீந்தர் சிங் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளைக் கடத்தி வந்துசிறுமிகளைக் கற்பழித்தும், சிறுவர்களை கொடூரமாக கொலை செய்தும் புதைத்ததாகவும் தெரிவித்தனர்.

Surinderஇதில் கொடூரம் என்னவென்றால் கொலை செய்த பின்னர் உடல்களை துண்டு துண்டாக வெட்டி அதைசாக்கடைக் கால்வாயில் போட்டுள்ளனர். மேலும் வீட்டுக்குள்ளும் புதைத்து வைத்துள்ளனர். சுரேந்தர் கோலிஉடல் உறுப்புகளை சாப்பிட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இருவருக்கும் அகமதாபாத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்தவிசாரணையின்போது நர மாமிசம் சாப்பிட்டதை சுரேந்தர் கோலி ஒத்துக் கொண்டதாக டிஜிபி புவா சிங்கூறியுள்ளார்.

Some of the missing kids and women

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விசாரணையின்போது சுரேந்தர் கோலி, உடல் உறுப்புகளைவெட்டி சாப்பிட்டதாக ஒத்துக் கொண்டான். ஆனால் அவற்றை சாப்பிட முடியாமல் அவன் வாந்திஎடுத்துள்ளான்.

சிறுமிகளை முதலில் கற்பழித்து விட்டு பின்னர் அவர்களை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விடுவானாம்சுரேந்தர். அதன் பின்னர் உடலை பல துண்டுகளாக வெட்டி சாக்கடையில் வீசி விடுவேன் என அவன்கூறியுள்ளான். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

இதற்கிடையே நேற்று மொஹீந்தர் வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையிலிருந்து மேலும் 2 பேரின் எலும்புக்கூடுகள் சிக்கியதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. அந்த சாக்கடையை மொத்தமாக தங்களது கட்டுப்பாட்டுக்குள்போலீஸார் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து தோண்டும் பணி நடந்து வருகிறது.

அரிசி ஆலையில் 4 குழந்தைகள் பிணம்:

இதற்கிடையில் பஞ்சாப்பில் அரிசி ஆலை ஒன்றில் 4 சிறுவர், சிறுமிகள் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் முன்னாள் எம்பி ஜெகமீத்சிங் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை முஸ்கர் நகரில் உள்ளது. 15ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த ஆலை கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 13ம் தேதி முஸ்கரில் மகாலிமேளா நடைபெறவுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீசார்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். அப்போது மூடப்பட்ட அரிசி ஆலையில் இருந்து துர்நாற்றம்வீசியது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.

அங்கு 4 சிறுவர், சிறுமிகள் உடல்கள் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரின்உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்என்று எதிர்கட்சியான சிரோன் மணி அகாலிதளம் வலியுறுத்தியுள்ளது.

அரசி ஆலையில் 4 குழந்தைகள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பைஎற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+