சதாம் உசேன் தூக்கு தவறானது-திடீர் பிளேர்
![]() |
லண்டன்:ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டது தவறானது என இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர்திடீரென கருத்து தெரிவித்துள்ளார்.
சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதை கண்டித்தும், ஆதரவு தெரிவித்தும் அனைத்து நாட்டு தலைவர்களும் தங்களதுகருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் எந்த கருத்தும் தெரிவிக்கமால் இருந்துவந்தார்.
சதாம் தூக்கிலிடப்பட்டபோது பிளேர் அமெரிக்காவில் இருந்தார். இப்போது தத் முதன் முறையாக தனதுகருத்தினை தெரிவித்துள்ளார். பிளேர் கூறுகையில்,
சதாம் உசேன் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதது. அவருடைய காட்டுமிராண்டித்தனத்தை யாரும் மறந்துவிடவும் முடியாது. ஆனால் அவர் செய்த குற்றத்துக்கு தூக்கில் போடுவது தான் சரியான தண்டனை என்பைதஎன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவரை தூக்கில் போட்டதை முற்றிலும் தவறாக கருதுகிறேன். அதிலும் அவர் தூக்கு போடப்பட்ட முறை இன்னும்மோசமானது. ஒரு குற்றத்துக்கு இன்னொரு குற்றம் தண்டனையாக இருக்க முடியாது. அவரை தூக்கில்போட்டபோது நடத்திய முறையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நாகரீகம் அடைந்த யாராலும் இதைஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே இராக்குக்கு மேலும் 21,500 வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆனால்,இங்கிலாந்து இனி எந்த கூடுதல் படைகளையும் இராக்குக்கு அனுப்பாது என அறிவித்துவிட்டது. இங்கிலாந்தின்வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்ரெட் பெக்கட் இதனை தெரிவித்தார்.
இந் நிலையில் சதாம் தூக்கிலிடப்பட்டபோது எடுக்கப்பட்ட இரண்டாவது வீடியோவில் இறந்து கிடக்கும் சதாமின்கழுத்தில் பெரிய வெட்டுக் காயமும் ரத்தமும் காணப்படுகிறது. தூக்குக் கயிறு இறுக்கியபோது கழுத்துஅறுபட்டதாகத் தெரிகிறது. தூக்கிலிடும்போது காயமின்றி தூக்கிட வேண்டும் என்ற சர்வதேச விதி உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications