இனி வெறும் சென்னை போலீஸ் தான் !
சென்னை:சென்னை மாநகர காவல்துறையின் பெயர் சென்னை காவல் என மாற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல்துறை கடந்த அதிமுக ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டது.செங்கை கிழக்கு மாவட்ட காவல்துறையை சென்னை மாநகர காவல்துறையுடன்இணைத்தனர். இதையடுத்து சென்னை மாநகர காவல்துறையின் எல்லைவிரிவடைந்தது.
இந்த நிலையில் தற்போது சென்னை மாநகர காவல்துறையின் பெயர் சென்னை காவல்(சென்னை போலீஸ்) என மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவு அரசுகெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 10ம் தேதி முதல் அதாவது நேற்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.எனவே இனிமேல் சென்னை மாநகர காவல்துறை, சென்னை காவல் எனஅழைக்கப்படும்.
போலீஸ் குறித்து கமிஷனுக்கு கருத்து தெரிவிக்க..:
போலீசார், காவல்துறை குறித்த தங்கள் கருத்துக்களை பொதுமக்கள் போலீஸ் கமிஷனுக்கு அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையை மேம்படுத்த 3வது போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் இக்கமிஷனின்தலைவராகவும், முன்னாள் எம்.பி., வெங்கடேசன் துணை தலைவராகவும், உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற டி.ஜி.பி., காளிமுத்து, ஓய்வு பெற்ற சிறை துறைதுணை தலைவர் ஜி.ராமச்சந்திரன்,
பயிற்சி துறை கூடுதல் டி.ஜி.பி., ராமானுஜம் மற்றும் ஜோன்ஸ் ரூசோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள போலீஸ் பயிற்சிகல்லூரியில் இந்த கமிஷன் அலுவலகம் இயங்கி வருகிறது.
பூர்ணலிங்கம், துணை தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பூர்ணலிங்கம் கூறியதாவது:
தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் காவல்துறையினரின் நலன்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யும்படி போலீஸ் கமிஷனுக்கு தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
காவல் துறையினருக்கான பணி, வீட்டு வசதி மற்றும் நலத்திட்டங்கள் ஆகியவையோடு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுதல், குற்றங்களை கண்டுபிடித்தல்,போக்குவரத்து ஒழுங்குப்படுத்துதல் ஆகியவற்றில் போலீசாரின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறோம்.
வழக்கு விசாரணைக்கு தேவையான வசதிகள், அதிகாரிகளை தேர்வு செய்தல், பயிற்சி, பொதுமக்களை நடத்தும் முறை தொடர்பாகவும் ஆய்வுகளைமேற்கொள்கிறோம்.
காவல்துறையை மேம்படுத்த பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை வரவேற்கிறோம். 200 கேள்விகள் கொண்ட கேள்வித்தாளை தயார் செய்துபொதுமக்களுக்கு அனுப்பும் பணியை செய்து வருகிறோம்.
இது தவிர ஓய்வு பெற்ற தலைமை செயலர்கள், எஸ்.பி. அந்தஸ்திலும் அதற்கு மேலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும் கேள்வித்தாளை அனுப்பும்பணி நடந்து வருகிறது.
கருத்துக்களை ஆய்வு செய்து நாங்கள் அரசுக்கு பரிந்துரை செய்வோம். சென்னை மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள்வரவேற்கப்படுகின்றன.
கருத்து தெரிவிக்க விரும்புவோர் 23710896 என்ற எண்ணில் பேசலாம். இ-மெயில் மூலம் தகவல்கொடுப்பவர்கள் [email protected] என்ற முகவரி மூலம் அனுப்பி வைக்கலாம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications