இந்திய விமானத்தை கடத்த தீவிரவாதிகள் திட்டம்
டெல்லி:இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகளை விடுவிக்க இந்திய விமானத்தை கடத்த மீண்டும்தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னைஉள்பட நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளமுகம்மது அப்சல் உள்ளிட்ட முக்கிய தீவிரவாதிகளை இந்திய சிறைகளில் இருந்து மீட்க லஷ்கர்-ஏ-தொய்பா,ஜெய்ஷ்-இ-முகம்மத், வங்க தேசத்தில் இருந்து செயல்படும் ஒரு தீவிரவாத அமைப்பு ஆகியவைதிட்டமிட்டுள்ளன.
இதற்காக கடந்த 2 மாதங்களாக இந்த அமைப்புகளின் தீவிரவாதிகள் இந்திய விமானத்தை கடத்த முயன்றுவருகின்றனர். இப்போது தங்களது திட்டத்தை தீவிரமாக்கியுள்ள தீவிரவாத அமைப்புகள் விமான நிலையங்களில்ஊடுருவ கடுமையாக முயன்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து ஐபி, ரா ஆகிய உளவுப் பிரிவுகள் மத்திய உள்துறை அமைச்சகத்தை எச்சரித்துள்ளன. இதையயடுத்துநாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் கூடுதல் பாதுகாப்பில் வைத்திருக்குமாறு மாநில அரசுகளுக்குஉள்துறை அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும் கராச்சி, காபூல், லாகூர் நகரங்களில் இருந்து வரும் விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள்ஊடுருவ வாய்ப்பு இருப்பதால் இந்த விமான பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications