ஸ்டவ் தான் இலவசம்.. கேஸ் அல்ல!
சென்னை:ஏழை, எளியவர்களுக்கு இலவச கேஸ் அடுப்பு வழங்கும் திட்டப்படி அடுப்பும், கேஸ் இணைப்பும் மட்டும்இலவசமாக வழங்கப்படவுள்ளது. சமையல் கேஸ் கட்டணத்தை பொது மக்களே செலுத்த வேண்டிருக்கும்.
தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்பு, இணைப்பு வழங்கும் திட்டம் பொங்கல் முதல் துவங்கப்படுகிறது.
இதற்காக கேஸ் அடுப்புகளும், இணைப்புகளும் (ரெகுலேட்டர்கள்) மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் வைக்கப் பட்டுள்ளன.
ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட இந்த கேஸ் அடுப்பின் விலை ரூ. 900 ஆகும்.
இலவச கேஸ் அடுப்புடன், காஸ் இணைப்பு பெறுவதற்கான டிபாசிட் செலுத்தப்பட்ட ரசீது, ரெகுலேட்டர், ரப்பர்குழாய், சமையல் கேஸ் நிரப்பிய சிலிண்டர் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
ஆனால், அரசின் இலவச திட்டத்தின்படி கேஸ் அடுப்பும் இணைப்பும் மட்டுமே இலவசம். எனவே, சிலிண்டரில்உள்ள சமையல் எரிவாயுக்கான கட்டணமான ரூ.292யை பயனாளிகளே ஏஜென்சிகளுக்கு செலுத்த வேண்டும்இருக்கும் எனத் தெரிகிறது.
அதே நேரத்தில் கேஸ் இணைப்புக்கான டெபாசிட் கட்டணமா ரூ. 1,000த்தை அரசே செலுத்தி ரசீதை இலவசமாகதந்துவிடும்.
மேலும் போதுமான பாதுகாப்பு இல்லாத குடியிருப்பில் உள்ள பயனாளிகள் தங்கள் வீடுகளுக்கு எண்ணெய்நிறுவனங்கள் குறிப்பிடும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தித் தந்தால் படிப்படியாக அவர்களுக்கும்இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்புகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பதால் எரிவாயு இணைப்பு இல்லாத அனைத்துகுடும்பங்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்வதன் அடிப்படையில் எரிவாயு இணைப்புகளும்எரிவாயு அடுப்புகளும் படிப்படியாக வழங்கப்படும் என இன்று அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications