கோவை துணை நகரம்-அரசுக்கு ஜெ. எச்சரிக்கை
சென்னை: விவசாய நிலங்களை கைப்பற்றி கோவை அருகே துணை நகரம் அமைக்க கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையை அடுத்த ஊரப்பாக்கம், ரத்தினமங்கலம், கண்டிகை, ஊனமாஞ்சேரி, அருக்கால், இல்லூர்,கொட்டமேடு உள்ளிட்ட 44 கிராமங்களை அழித்து துணை நகரம் நிறுவப் போகிறேன் என்றார் கருணாநிதி. இதையார் எதிர்த்தாலும் சந்திக்க தயார் என சட்டப் பேரவையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி பேசினார்.
அந்த கிராமங்களில் அவரது கட்சி கொடி கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. அவரது கட்சி அலுவலகங்கள்அடித்து நொறுக்கப்பட்டன. பின்னர் துணை நகரத்துக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை விட்டார் கருணாநிதி.
மத்திய அரசில் திமுக பங்கு வகித்து கொண்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன பங்குகளை விற்பது எனமுடிவு செய்து, அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததும்,தொழிலாளர்களுக்கு ஆதரவு நிலையை திடீரென்று எடுத்தார்.
சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திலும், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்த தீவிரம்காட்டியதும், பாதிக்கப்படப் போகும் மக்களுக்கு ஆதரவாக நான் துணை நிற்பேன் என்றதும் அந்த முடிவில்இருந்து கருணாநிதி பின் வாங்கினார்.
இப்போது கோவை அருகே ஒரு துணை நகரத்தை உருவாக்கப் போகிறேன் என்று வெள்ளலூர் மற்றும்செட்டிப்பாளையம் பகுதியில் 2,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அந்த இடத்தை சிறப்புபொருளாதார மண்டலம் மற்றும் துணை நகரம் அமைக்க போவதாக கருணாநிதி கூறுவது சதிகாரமானது.
பயன்பாட்டில் உள்ள இந்த விவாசய நிலங்களையும், தோட்டங்களையும் அரசு கையகப்படுத்தினால், தங்களதுவாழ்வாதாரம் பாதிக்கும் என்று தங்களது உயிரே போனாலும் இந்தப் பகுதியை விட்டுத்தர் மாட்டோம் என்றும்,அப்படியும் மீறி நிலத்தை பறித்தால் தற்கொலை செய்தாவது தடுப்போம் என்றும் இந்தப் பகுதி மக்கள் உறுதியாகஇருக்கிறார்கள்.
அவர்களுக்கு வேறு தொழில் இல்லை, பிழைப்பே இந்த நிலத்தை வைத்து தான். இதுகுறித்து விவசாயிகள்மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடச் சென்றால் அவர்கள் மக்கள் முன் வர மறுக்கிறார். இதனால்விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
திமுக ஆட்சி வந்ததில் இருந்து விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுஅபாயகரமானது. தொழில் நுட்ப பூங்கா என்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றும் உருவாக்கி உள்ளூர்விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதை இந்த அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கட்டாயப்படுத்தி நிலங்களைகையகப்படுத்தக் கூடாது என இந்த அரசை வலியுறுத்திகிறேன்.
நிலம் கையகப்படுத்தும் முயற்சி நீடித்தால் மக்கள் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என எச்சரிக்கையாகதெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications