மதிமுக சபதம் கண்டு பயப்படவில்லை: கருணாநிதி
சென்னை:திமுக ஆட்சியை ஒழித்தே தீருவோம் என்று மதிமுக பொதுக்குழுவில் சபதமிட்டு இருக்கிறார்கள். இந்த சபதத்தைகண்டு பயப்படவும் இல்லை, கவலைப்படவும் இல்லை என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த மதிமுகவினர் கருணாநிதி முன்னிலையில் இன்று திமுகவில்இணைந்தனர். அவர்கள் மத்தியில் கருணாநிதி பேசியதாவது,
திமுகவில் இருந்து பிரிந்து வேறு ஒரு அமைப்பாக இயங்கி வந்த நீங்கள் தாய் கழகத்திற்கே திரும்பிவந்துள்ளீர்கள். உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். நீங்கள் இருந்த அமைப்பு இடை இடையே திமுகவுடன்தோழமையை பெற்று, துணை பெற்று இயங்கியது.
அந்த அமைப்பை இயக்கியவருக்கு திமுக எப்படியெல்லாம் துணையாக இருந்தது என்று நீங்கள் அறிவீர்கள்.நேற்று அவர்கள் பொதுக்குழு என்ற பெயரில் நடத்திய கூட்டத்தில் அதிமுகவோடு இணைந்து இருப்போம். திமுகஆட்சியை ஒழித்தே தீருவோம் என்று சபதமிட்டு இருக்கிறார்கள். இந்த சபதத்தை எல்லாம் கண்டுபயப்படவில்லை, கவலைப்படவும் இல்லை.
எத்தனையோ முறை இதுபோல சபதம் செய்து இருக்கிறார்கள். சூளுரைத்து இருக்கிறார்கள் என்பது உங்களுக்குதெரியும். நேற்றைய பொதுக்குழுவில் திமுகவை இழித்தும், பழித்தும் பேசி இருக்கிறார்கள். அதைப்பற்றிஎல்லாம் கவலைப்படவில்லை. மக்கள் ஒப்படைத்த ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று சிந்தித்து நடத்திகொண்டு இருக்கிறோம்.
ஆவது ஆகட்டும் என்று தொடர்ந்து நேர்மையுடன் நடை போடுகிறோம். பெரியாரின் சமத்துவகொள்கைகளையும், அண்ணாவின் லட்சிய கொள்கைகளையும் ஏற்று நாட்டுக்கு தொண்டாற்றி வருகிறோம்.
நீங்கள் திமுக உறுப்பினர்களாக ஆகியிருப்பது மகிழ்ச்சி, நீங்கள் அனைவரும் மக்கள் பணியில் ஈடுபடவேண்டும். திமுகவுக்கு வந்துள்ள உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். ஒன்றுபட்டு ஒற்றுமையுடன்மக்களுக்காக பாடுபடுவோம் என்றார்.
ரூ 1 கோடி தந்த கருணாநிதி:
தமிழகத்தில 5 சிறந்த எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் பரிசளிக்க ரூ. 1 கோடியை தென்னிந்திய புத்தகவிற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு முதல்வர் கருணாநிதி தனது சொந்த பணத்தில் இருந்துவழங்கினார்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளியில் இந்தபுத்தக கண்காட்சி நடக்கிறது. வரும் 21ம் தேதி வரை நடக்கும் இக் கண்காட்சியை துவக்கி வைத்து கருணாநிதிபேசியதாவது:
பலமுறை அழைக்கப்பட்டும், இந்த புத்தக காட்சியில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனது. 30வதுபுத்தக காட்சியை துவக்கி வைத்து கலந்து கொள்ள வந்துள்ளேன். கோரிக்கைகள் நம் தலையில் விழும்என்பதற்காக தவிர்க்கவில்லை.
இங்கு விருது வழங்கப்பட்டது, கேடயம் வழங்கப்பட்டது.
பொற்கிழி வழங்கப்படும் என எதிர்பார்த்தேன். கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் என்னை ஏமாற்றிவிட்டார். அவரைப் பார்க்கும் போது சேலம் மாடர்ன் தியேட்டரில் துவங்கி, என் நண்பராக இருந்தகண்ணதாசனின் நினைவுகள் என் நெஞ்சமெல்லாம் நிறைந்துள்ளன.
நிரந்தர புத்தக காட்சி நடத்த சென்னையில் எத்திராஜ் கல்லூரி அருகில் மற்றும் சைதாப்பேட்டையில்இடமிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். இந்த அமைப்பினர் எது சரியான இடம் எனதேர்ந்தெடுத்தால், நீங்களும் அரசும் இருவரும் இணைந்து அரங்குகளை கட்டலாம்.
சன் டிவியில் இருந்து என் மனைவிக்கு கிடைத்த பங்குத் தொகை மூலம், நலிந்தோருக்கு பல்வேறு உதவிகள்செய்யப்பட்டு வருகின்றன. அந்த எனது பணத்தில் இருந்து தான் ஒரு கோடி ரூபாயை இந்த சங்கத்திற்குவழங்குகிறேன்.
இதன்மூலம், ஆண்டுதோறும் சிறந்த ஐந்து எழுத்தாளர்களுக்கு தலா ஒரு லட்சம் பொற்கிழியாக வழங்க கேட்டுக்கொள்கிறேன் என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன், பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், நல்லி குப்புசாமிசெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் சிறந்த எழுத்தாளராக தேர்வு செய்யப்பட்ட பிரபஞ்சன், சிறந்த குழந்தை எழுத்தாளராக தேர்வானரேவதி, சிறந்த புத்தக விற் பனையாளராக தேர்வான அகஸ்தியர், சிறந்த பதிப்பாளராக பிரேமா பிரசுரம்ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications