பாதுகாப்பு துறையில் ஒரு மகா பிராடு அதிகாரி!
பெங்களூர்:பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜி.டி.ஆர்.ஈ (கேஸ் டர்பைன் ரிசர்ச் எஸ்டாபிளிஷ்மெண்ட்)ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த அதிகாரி மீது வருமானத்தை மீறி சொத்து குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவுசெய்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித்துறையின் (டி.ஆர்.டி.ஓ) முக்கியமான பிரிவு இந்த கேஸ் டர்பைன்ஆராய்ச்சி மையம். இதில் டெக்னிகல் அதிகாரியாக பணியாற்றும் கேரளத்தைச் சேர்ந்த கே.பி.மோகன் குமார்பெங்களூரில் மட்டும் 17 பிளாட்டுகளை வாங்கிப் போட்டுள்ளார்.
இத்தனைக்கும் இவரது சம்பளம் மாதம் ரூ. 20,000த்தை தாண்டாது. ஆராய்ச்சி நிறுவனத்தில் காண்ட்ராக்டகள்தருவதில் ஆரம்பித்து எல்லா வகையிலும் புகுந்து விளையாடி ஊழல் செய்துள்ளார் மோகன் குமார்.
இவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ரூ. 3.4 லட்சம் ரொக்கம் சிக்கியது. மேலும் வங்கி முதலீடுகள் உள்படரூ. 45 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள், 17 பிளாட்டுகளின் ஆவணங்களும் மாட்டின. மேலும் கேரளத்திலும் ஒருபங்களாவை வாங்கியுள்ளனர். அந்த ஆவணமும் சிக்கியது.
மோகன்குமார்-பிந்துவின் பெயரில் எச்டிஎப்சியில் உள்ள லாக்கரை சிபிஐ அதிகாரிகள் திறந்து பார்த்தபோதுஅதில் 300 பவுன் தங்க நகைகள் குவிந்து கிடந்தன.
இதையடுத்து மோகன் குமார் மீதும் அவரது மனைவி பிந்து மீதும் சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவுவழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இந்த பிராடு தம்பதியிடம் டயோடா கரோலா, டயோடா குவாலிஸ், ஹூண்டாய் சான்ட்ரோ ஆகிய கார்களும்உள்ளன. அவையும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications