அபாய நிலையில் ஊட்டி மலை பாதை-குழு ஆய்வு
சென்னை:ஊட்டி மலைப் பாதை ஆபத்தான நிலையில் இருப்பதாக பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொது நல வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. அதில்,
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர்-ஊட்டி வழியாக காக்கநல்லாவரை செல்லும் சாலைகள் படு மோசமாகஉள்ளன. இந்த சாலைகள் பல காலமாக பராமரிக்கப்படாமலேயே உள்ளதால் விபத்துக்கள் ஏற்படும்அபாயகரமான சூழல் நிலவுகிறது. எனவே இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டு சாலைகளை சீர் செய்யஉத்தரவிட வேண்டும்.
மேலும் இந்தச் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலித்து சுற்றுலா பயணிகள்சுரண்டுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர், மேட்டுப்பாளையத்தில் இருந்துகாக்கநல்லாவரை உள்ள தேசிய நெடுஞ்சாலையையும் நகராட்சிக்கு சொந்தமான சாலையையும் ஆய்வு செய்யநிபுணர் குழுவை அமைக்க உத்தரவிடுகிறோம்.
புவியியல் நிபுணர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் அடங்கிய இந்தக் குழு சாலைகளை ஆய்வு செய்து வரும்பிப்ரவரி 28ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து வந்துள்ள புகாருக்கு ஊட்டி,கூடலூர் நகராட்சிகளின் கமிஷ்னர்கள் 2 வாரத்தில் பதில் தர வேண்டும் என உத்தரவிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications