9வது அட்டவணை-உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டெல்லி:இந்திய அரசியல் அமைப்பின் 9வது அட்டவணையில் 1973ம் ஆண்டுக்குப் பின் சேர்க்கப்பட்ட அனைத்துசட்டங்கள், சட்ட திருத்தங்களையும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடிவும் என உச்ச நீதிமன்றம் பரபரப்புதீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தையும் மறு ஆய்வு செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டுஎனவும் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் தெரிவித்துள்ளது.
இதுவரை 9வது அட்டவணையில் சேர்க்கப்படும் எந்த சட்டத்திலும் நீதிமன்றம் தலையிட முடியாது, மறு ஆய்வுசெய்ய முடியாது என்ற நிலை இருந்தது. இதனால் தான் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த அதை 9வதுஅட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அவ்வாறே அது அந்த அட்டவணையிலும்சேர்க்கப்பட்டது.
இந் நிலையில் தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இன்று அளித்ததீர்ப்பில், 1973ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதிக்குப் பின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சுமார் 282சட்டங்கள், சட்ட திருத்தங்களையும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடிவும் என தீர்ப்பளித்தது.
மேலும், 9 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து சட்டங்களையும் 3 நீதிபதிகள் அடங்கிய கொண்டபெஞ்ச் தான் விசாரிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.
நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுவிட்டால் அதில்நீதிமன்றம் தலையிட முடியாது என்ற வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
தலைமை நீதிபதி சபர்வால் தவிர, நீதிபதிகள் அசோக் பான், அரிஜித் பசாயத், பிபி சிங், கபாடயா, தாக்கர்,பாலசுப்பிரமணியம், அலதாமஸ் ரபீர், டிகே ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது.
பாஜக, சு.சுவாமி வரவேற்பு:
இந்தத் தீர்ப்பை பாஜகவும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும் வரவேற்றுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications